Sunday, December 27, 2009

தெளிந்த கிரிக்கெட் பைத்தியம்



சின்ன வயசுல நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் (மத்த நிறையா பேர் போலத்தான்).. வாய்ப்பு கிடைச்சா டெஸ்ட் மேட்ச்ச கூட ஒரு பந்து விடாம பார்க்க கூடிய ஆளு..

நியுசிலாந்துல நடக்கும் டெஸ்ட் மேட்ச் பார்க்கறதுக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உக்காந்து டிவில brightness-அ நல்லா குறைச்சிட்டு, நெகட்டிவ் மாதிரி தெரியுறத பார்த்தத நெனச்சா இப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கு (இல்லினா வீட்ல ஃடோஸ் விழும்!)!!

இந்தியா ஜெயிச்சா கொண்டாட்டம் தான்.. இந்தியா தோத்ததிறகு எத்தனையோ நாள் அழுதிருக்கேன்.. அதிலயும் குறிப்பா சென்னைல பாகிஸ்தான் கூட நடந்த மேட்ச்சுல (சச்சின், நயன் மோங்கியா கடைசி வரை போராடி) 12 ரன்ல தோத்ததுக்கு அழுதது இன்னிக்கு வரைக்கும் நினைவுல இருக்குது!

சோயிப் அப்ரிடி, ஜெயசூர்யா, அக்தர், மெக்ராத்தெல்லாம் நமக்கு சிம்ம சொப்பனம் (அவுங்க நல்லா ஃபார்ம்ல இருந்த போது) ..

நான் இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ற ஒரே காரணத்துக்காக என்னோட தம்பி எதிர் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவான்.. நிறையா தடவ சின்ன சின்ன அடிதடில முடிஞ்சிரும்!!

சரி, இன்னிக்கு நிலைக்கு வருவோம்.. திடீர்னு இப்படி ஒரு பதிவ போடறதுக்கு என்னா காரணம்?? இப்ப நான் லீவுல சேலத்துல இருக்கேன்.. நம்ம நண்பர்கள் நிறையா பேருக்கு கிரிக்கெட் (பார்க்கறதுல) இருக்க ஆர்வம் கொஞ்சம் கூட குறைஞ்சதா தெரியல.. ஒரு பந்து விடாம உக்காந்து கிட்டு பார்ககறது, 2 நிமிசத்துக்கு ஒரு தடவ போன் பண்ணி ஸ்கோர் கேட்கிறதெல்லாம் ரொம்ப செயற்கையா இருக்கிற மாதிரி தோணுது.. பெங்களூர் நண்பர்கள் கிட்டயும் இதே நிலைமை தான்.. மேட்ச் இருந்தா Rediff, CricInfoனு இறங்கிடறாங்க!!

எனக்கு இந்த அளவுக்கு கிரி்க்கெட்ல இருந்த ஆர்வம் குறைஞ்சி போனதுக்கு என்னா காரணமா இருக்கும் யோசித்தது தான் இந்த பதிவு!

ஆரம்பத்துல, வேலைக்குன்னு பெங்களூர், டெல்லினு டிவியே இல்லாம கிட்டதட்ட நாலு வருசம் இருந்ததுனால இதில இருந்த ஆர்வம் பாதியா குறைஞ்சி போச்சி..

அதிலயும் நான் ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல (MIS Department-ல) வேலை பார்த்த போது கிரிக்கெட்ல வீசற ஒவ்வொரு பந்துக்கு பின்னாடியும் எவ்ளோ காசு விளையாடுதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது.. (எல்லாருக்கும் தெரிஞ்சது தான்) இன்னிக்கு இந்தியாவுல வர விளையாட்டு சானல்கள்ள எவ்ளோ (இந்தியா) கிரிக்கெட் content இருக்துங்கறத பொறுத்து தான் அதனோட வியாபாரம்..

இதுக்கு வேற டிரெய்லர், டான்ஸ், Opening / Ending ceremony னு ஏகப்பட்ட பில்ட்-அப்புகள்.. இந்த அளவுக்கு பில்ட்-அப் கொடுத்து அவனவன் பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உக்காந்து நம்ம நேரத்த வீணடிச்சிக்க மனசு வரதில்ல..

டி20 மாதிரி ரொம்ப குறைந்த நேரமே வர விளையாட்டுகள பார்க்கலாம்னா கூட சரியா நேரம் செட் ஆகறதில்ல.. சமயம் கிடைக்குறப்போ டி20ல கடைசி 5 ஓவர் உக்காந்து பார்க்கறதோட சரி..

இதுக்கே எப்ப பாத்தாலும் கிரிக்கெட்னு பொண்டாட்டி கம்ப்ளைன்ட் (சும்மா சேனல் மாத்தி கிட்டு இருக்கும் போது கிரிக்கெட் வந்தா கூட!!)

இதுல நேரா போய் மைதானத்துல உக்காந்து பார்க்கறது வேற!! கம்பி வலைகளுக்கு பின்னாடி, மிருக காட்சி சாலை மாதிரி.. இதுல யார் மிருகம், யார் மனுசங்க.. இதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் முகப்புல இருக்க போட்டோ??

சரி பதிவ முடிக்கறதுக்கு முன்னாடி நெறயா பேருக்கு தெரிஞ்சு தெரியாத சில விசயங்கள்..

முதல்ல பிசிசிஐ (BCCI) பத்தி..
நெறையா பேர் நினைக்கிற மாதிரி இப்ப இருக்கிற இந்திய அணிங்கறது எந்த விதத்துலயும் நம்ம நாட்ட நேரடியா represent பண்றது இல்ல.. "டீம் இந்தியா" ங்கறது தான் முழு பிராண்ட் நேம்.. இது BCCI-ங்கற தனியார் அமைப்போட முழு நிர்வாகத்துல இருக்கு.. இப்ப இதுக்கு தான் முழுசா எல்லா அதிகாரமும், சப்போர்ட்டும்  இருக்கு.. இதுக்கு போட்டியா துவக்கப்பட்ட அமைப்புகளுக்கு விளையாட சரியா மைதானம் கூட கிடைக்கறது இல்லங்கிறது தான் உண்மை.. இந்த அணிக்கு என்னமே இந்திய ராணுவத்துக்கு இணையாதான் இந்த அணிக்கு மரியாதை.. இத சப்போர்ட் பண்ணலனா ஈசியா தேச துரோகினு முத்திரை குத்தீடுவாங்க.. இந்த உண்மை நிறையா பேருக்கு தெரிஞ்சாதான் BCCI-யோட monopoly கொஞ்சமாவது குறையும்..
 `Team India plays for BCCI, not Govt'

அடுத்து கொரியா அதிபர் கொடுத்திருக்கிற ஒரு அறிவிப்பு..
உற்பத்தி திறன் பாதிக்க படறதுனால கொரியாவுல உலக கோப்பை கால்பந்து போட்டிகள நேரடியா ஒளிபரப்ப தடை விதிச்சு இருக்காரு கொரிய அதிபர்.. கொரிய அணி ஜெயிச்சா மட்டும் ஹைலைட்ஸ்.. இல்லினா அவங்கவுங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்... நம்ப அம்மணி ஊர் ஊரா குடும்பத்தோட டூர் போறதோட சரி!!!!
North Korea to censor World Cup heavily

கடைசியா கிரிக்கெட்ட கொஞ்சம் மறந்திட்டு மத்த விளையாட்டுகளையும் ஊக்க படுத்தனும்கறது என்னோட தனிப்பட்ட ஆசை.

2 comments:

  1. நானெல்லாம் டெஸ்ட் மேட்ச் கூட ஒரு பந்துவிடாம பார்த்திருக்கிறேன்.

    நான் அழுதது, ஷார்ஜா அந்த ஹேட்ரிக் அக்யுப் ஜாவித் மூணு எல்.பி.டபிள்யூ கொடுத்தவுடனே அழுதுட்டேன். ஷார்ஜால கூட்டம் வெறித்தனமா இருக்கும்.

    அப்புறம் மேட்ச் பிக்சிங் வந்தவுடனே வெறுத்து போச்சு.

    இப்ப நேரம் கிடைச்சா பார்க்குறது, அதுவும் பேட்டிங் மட்டும்.

    விளையாட்ட தடை பண்றது அராஜகம். கொரியால ஒருத்தனும் வேலை பார்க்காம, எப்படி ஸ்கோர் தெரிஞ்சுக்குறதுன்னு உட்கார்ந்திருக்க போறாங்க பாருங்க.

    ReplyDelete
  2. பின்னோக்கி said...
    // விளையாட்ட தடை பண்றது அராஜகம். கொரியால ஒருத்தனும் வேலை பார்க்காம, எப்படி ஸ்கோர் தெரிஞ்சுக்குறதுன்னு உட்கார்ந்திருக்க போறாங்க பாருங்க. //

    விளையாட்டை மொத்தமா தடை செய்யறது தப்பு தான்.. ஆனா எதாவது ஒரு வகையில லிமிட்டா வச்சிருந்தா நல்லதோனு தோணுது.. இல்லினா வருசத்துக்கு 365 நாளும் ஆரம்பிச்சிடுவானுங்க

    ReplyDelete