Tuesday, February 5, 2013

சாலை சாகசம் செய்வதற்கு அல்ல

எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க அறிவுரைள் நிறைந்த பதிவு..
 
கீழே உள்ளவற்றை கந்தசாமியில் வரும் பட்சா பாட்டு போல படிக்கவும்..

சரக்கு

செல்போன்
அதிவேகம்
சிக்னல் ஜம்ப்
ஓவர் லோடு 
வேடிக்கை
சினிமா போஸ்டர்
ஷேர் ஆட்டோ
பூசணிக்காய்
ஹெல்மெட்

இதெல்லாம் டூப்பு.. நம்ம ஊரு டிரைவர் தான் டாப்பு!!

ஆனா மொக்கை போதும்.. நம்ம நாட்டுல (மற்றும் வெகு சில நாடுகள்ள) மட்டும் தான் இத்தனை அஜாக்கிரதைனு நெனக்கிறேன்.. கொஞ்சம் கூட விதிகள மதிக்கறதில்ல.. அதிகபட்சம் ஒரு வழிப்பாதை, டிரிப்பிள்ஸ் இத மட்டும் தான் கொஞ்சமாவது சீரியஸா எடுத்துகிறாங்க.. அதுவும் டிராபிக் போலிஸ் இருந்தா மட்டும்!



ர்ணனோட கவசகுண்டலம் போ என்னமோ பொறந்ததுல இருந்தே கூட இருக்குமாதி்ரியே செல்போஒரு கைல பிடிச்சு பேசிகிட்டுதாசர்வகாலமும் வண்டி ஓட்றாங்க நம்ம ஆளுங்க.. ஜாலியா பேசிகிட்டு முன்பின் வர வண்டி, ஆளுங்கள பார்க்காம இவனுங்க பண்றது கிட்டதட்ட சர்க்கஸ் தான்.. ீழேவிழுந்தா செல்போனும் போச்சு நம்ம போனும் (Bone) போச்சு.. செல்போன் பேசிய படி வாகனம் ஓட்ட வேண்டாம்.. 

நமக்கு நம்ம உயிரும் முக்கியம் ரோட்ல போற மத்த (அப்பாவிங்க) உயிருக்கும், உடைமைக்கும் மதிப்பு இருக்கு.. so, தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்ட வேண்டாம்.. முடிஞ்சா தண்ணியே அடிக்க வேண்டாம் ;)

அவசரம் மற்றும் எந்த காரணங்களுக்காகவும் அதிவேகம் வேண்டாம்.. நமக்கு நடக்காது என்ற அஜாக்கிரதையே விபத்துக்களுக்கு காரணம்..வ்வளவு வேகமா போனாலும் அதிகபட்ச வித்தியாசம் 10 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை..

சில வருடங்களுக்கு முன்பு வண்டியிலிருந்து கீழே விழுந்தேன்.. வீடுகட்ட வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடப்பா கற்களில் "டமார்" என்று தலை மோதியது.. அடுத்த நாள் விடிந்ததும் பார்த்தால் ஹெல்மட்டில் பின் பகுதியில் செமத்தியாக அடிபட்டிருந்தது.. தலைக்கவசம் அணியாமல் சென்றிருந்தால் நிச்சயம் இன்று உட்கார்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.. தலைக்கவசம் நிச்சயம் உயிர் கவசம். காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவதும் விபத்துகளில் உயிர் காக்கும்.. 

சேலம் மாதிரி வளர்ந்து வரும் நகரங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பலமடங்கு பெருகிவரும்நிலையில் பெரும்பாலானோர் எந்த சாலைவிதிகளையுமே மதிப்பதில்லை.. நான்கு புறமும் குறுக்கும் நெடுக்குமாக ண்டிகளை ட்டுவது தோ மேட்ரிக்ஸ் பட சாகச காட்சிமாதிரிருக்கிறது.. இதில் தனியார் பேருந்துகளும், ஷேர் ட்டோக்களும் தலைசொறிய கையத்தூக்கினாக்கூட நடுவழியில் ப்படியே நிறுத்திவிடுகிறார்கள் ;-(

 

வண்டி ஓட்றவங்க தான்னு இல்ல, பாதசாரிகள் கூட பல சமயம் ரோட்ல குறுக்க வந்து விபத்த ஏற்படுத்துகிறார்கள்.. நம்ம வண்டிய சரியா ஓட்டிட்டு போனாலும் இவர்கள் அலட்சியத்தால வந்து வண்டியில விழறாங்க.. அடிபட்டதுக்கு அப்புறம் ஆயிரந்தான் காரணம் சொன்னாலும் விளைவுகள அனுபவிக்க போறது 100%  அவர்கள்தான்.. எனவே சாலையை கடக்கும் போது கவனம் தேவை.. செல்போன்ல கடலை போட்டுக்கிட்டே வந்து வினையை வாங்கிக்கட்டிகிட்டு போவாதீங்க..


High Beam (உயர்கற்றை) விக்குகள் நெடுஞ்சாலைகளில் ல்லது மிகவும் இருளான பகுதிகளில் உபயோகப்படுத்துவற்காக இருப்பவை, அதை சோடியம் விளக்கு நிறைந்த தெருக்களிலும் போட்டு எதிரில் வருபவரை தடுமாற செய்வது தறு.. அஜாக்கிரதையாக எதிரில வருபவனுக்கு நாம் அப்படிசெய்தால் - நமக்கு இன்னொருவன் ப்பு வைப்பான்! புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 4 - 6 வழி நெடுஞ்சாலைகளில் இரும்பிலான மீடியன்களுக்கு திலாக செடிகள் வர்த்து எதிரில் வரும் அதிக ஒளியை தடுத்திருப்பது பாராட்டுக்குரிது :-) 

வண்டி ஓட்றவன் மூடு அன்னிக்கு சரியில்லானா போச்சு - மத்தவன் மேல் இருக்கிற அத்தனை கோவத்தையும் ஹாரன் மேல காமிக்க வேண்டியது.. ஹாரனுக்கும் சைரனுக்கும் (Siren) வித்தியாசம் புரியாம ஹாரனடிச்சா உடனே ழிகிடைக்கும்னு நினைக்கிற முட்டாள்கள் நிறைய பேர் ங்கு உண்டு.. ஒலி மாசுபடுவது குறித்த யாருக்குமே விழிப்புணர்வு இன்னும் வரல.. என்னையும் சேர்த்து! பெங்களூர்ல திங்கட்கிழமைகள்ல "No Horn Day" அப்படினுட்டு விளம்பரங்கள் செய்து கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.. குறைந்தபட்சம் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் பக்கத்துலயாவது ஹாரன் ஒலிப்பதை குறைக்கலாம்..

கடைசியா பெங்களூர் டிராபிக் போலிஸ் முகநூலில் செய்துதரும் வசதிகள் நிச்சயம் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன..தாரணமா இப்ப ஒரு வண்டி "நோ பார்க்கிங்கில்" அல்லது நடைபாதைய மறிச்சு நிறுத்தி வச்சிட்டு போய்ட்டான்னு வச்சுக்குங்க.. சும்மா நம்ம செல்போன்ல ண்டியின் எண் தெரியும்படி ஒரு போட்டோ எடுத்து அவர்கள் முகநூல் பக்கத்தில் போட்டுட்டா போதும்.. உண்மைதன்மைய சரிபார்த்துட்டு அதற்கு உண்டான அபராதம் விதிக்கபடும்.. அன் அடுத்ததடவ மாட்டும்போது ஒரு பெரிய லிஸ்டே வரும் இதற்கு முன் பாக்கி வைத்திருக்கும் அத்துனை அபராதங்களும் சேர்த்துவைத்து வசூலிக்கப்படும்.. இது மட்டுமல்ல நம்ம கருத்துக்களையும் பகிர்ந்துக்கலாம் - நல்ல யோசனைகள் பெரும்பாலும் செயல்படுத்தப்படுகிறது.. நிறைய விழிப்புணர்வூட்டும் காணொளிகளும் அவ்வப்போது பதிவிடப்படுகின்றன.. நிச்சயம் இது ஒரு முன்மாதிரி நடவடிக்கை.. கிட்டதட்ட 60000 பேர் ண்பர்களா பதிவு செஞ்சிருக்காங்க.. :-)

புது கார் ஓட்டிகளுக்கு உதவும் ஒரு பக்கம்.. Things they don’t teach you at an Indian driving school 

குறைந்தபட்சம் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது..

தயவு செய்து தலைக்கவசம் (அ) சட் பெல்ட் அணியுங்கள்
குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்
சாலைவிதிகளை மதியுங்கள்
சாலையில் சர்க்கஸ் வேண்டாம்
லிப்பானை (Horn) தேவையின்றி பயன்படுத்த வேண்டாம்

குசும்பு: அண்ணே பின்னாடி ஒருத்தன் வண்டியே இல்லாம வர்ரான்.. அவன போய் முதல்ல பிடிங்க # கவுண்டர் பாறைகள் ;)

Monday, February 4, 2013

கமலும் கும்கி ஜோசியரும்

கமல்:    ஜோசியரே நமக்கு ஏதாவது சொல்லுங்க.. இங்கையே இருக்கலாமா இல்ல பேசாம பாலிவுட், ஹாலிவுட்டுனு போயிரலாமா..

ஜோசியர்:
உங்களுக்கு உங்க போட்டோவே வந்திருக்கு (!!).. நீங்க எவ்வளவு திறமையா வேலை செஞ்சாலும் 58 வயசு வரைக்கும் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு படாதபாடு படுவீங்க.. வழக்கு மேல வழக்கா வந்து விழும்..

கமல்:
    (ரொம்ப மகிழ்ச்சியா) ஓ அப்படியா.. அப்ப 58 வயசுக்கு மேல :-))))

ஜோசியர்: அதுவே பழகிறும்.. ஹிஹி!!

கமல்:
    ~!@#$%^&*?!! டேய்.. ஒரு பேச்சுக்கு கூட என்ன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா...... ஏய் ஒன்ன விட மாட்டேன்.......

ரஜினி:
    கமல் அமைதி அமைதி.. நாங்கல்லாம் இருக்கோம்ல..

கமல்:     அப்பாடா.. உங்கள மாதிரி நண்பர்கள் அன்பு இருக்கே.. அது போதுங்க...

ரஜினி:     சரி சரி..... அது கிடக்கட்டும்.. உங்கள பத்தி போய் ஏன் அவன்கிட்ட கேக்குறீங்க.............. உங்களுக்கே தெரியாதா ;-)))

கமல்:     அவ்வ்வ்............



டிஸ்கி: இது சும்மா ஒரு ஜோக்குக்கு.. யாரும் சீரியசா எடுத்துக்க வேண்டாம் :-)

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் - ஒரு வெகுஜன ரசிகனின் பார்வையில்


நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் - எந்திரன் படத்துக்கு கூட பதிவு எழுதல.. ஆனா என்னமோ இந்த படத்துக்கு எழுத தோணுச்சு..

தமிழ் படங்களை ஒப்பிட்டு மட்டுமே இந்த பதிவு. அவதார் அளவுக்கு 1000 கோடி செலவு செய்து எடுக்க இங்க சூழ்நிலை இன்னும் அமையவில்லைனு புரிஞ்சா சரி.


ஹாலிவுட் தரத்தை கிட்டதட்ட தொட்டுவிடும் அளவுக்கு நிறைய தொழில்நுட்ப விசயங்கள், பிரமாண்டம். தமிழ்ல முதல் முறையா இந்த அளவுக்கு அதிரடி ஆக்சன் படம் அமைஞ்சது இல்லைனு நிச்சயம் சொல்லலாம்.

ஆப்கான் தீவிரவாதி, அமெரிக்கா, வெடிகுண்டுனு எளிதில் ஊகிக்க கூடிய கதையிலும் நச்சுனு சில பல திருப்பங்களை வைத்தது படத்துக்கு மிகப்பெரிய பலம்..

சாதுவா வரும் கமல் கேரக்டர் சும்மா பிண்ணி பெடலெடுக்கிறாரு.. கெடைச்ச கேப்ல எல்லாம் ஸ்கோர் செஞ்சிருக்காரு (Completely Steals the show).

நடிப்பு.. நேர்த்தி!! என்னா ஒரு அர்ப்பணிப்பு உணர்வு.. கமல்-ரஜினிகிட்ட இருந்து இளைய தலைமுறையாகிய நம்ம கத்துக்க வேண்டிய முக்கியமான விசயம்.. இவ்வளவு தூரம் வளர்ந்துட்டோமே - இனி நம்மல யார் கேள்வி கேட்க போறானு அலட்சியம் இல்லாம நிறைய மெனக்கெட்டு நடிச்சிருக்காரு கமல்.  பூஜா குமாரும் - ஆண்ட்ரியாவும் அவர்களோட பங்கை சரியா செஞ்சிருக்காங்க.. வில்லனா வரும் நடிகர் செம மிரட்டல்.. நாசர் ஒருத்தர மட்டும் தான் சரியா பயன்படுத்திக்கலனு தோணுது..

பாடல்களை படத்தில் காட்சியமைப்புடன் பார்க்கும் போது இன்னும் ரொம்ப நல்லா இருக்குது.. முதல் பாடல் "உன்னை காணாத.." சூப்பர்.. கமல் கலக்கல்ஸ், ஆண்ட்ரியா அழகு! "அணு விதைத்த பூமியிலே" கண்ணீர்.

பிரமாண்டமான ஆப்கானிஸ்தான் பகுதிகள்.. செட் போட்டு எடுத்தாங்களா இல்ல நெசமானு பிரித்து பார்க்க முடியாத அளவு அருமை. தற்போது வரும் தமிழ் படங்கள்ல ஒளிப்பதிவுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒலிப்பதிவுக்கு தரப்படுவதில்லை.. விஸ்வரூபத்தில் அருமையான, மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு.. பல இடங்களில் பக்கத்து சீட்ல, பின்னாடி சீட்ல இருந்து கேட்கிற மாதிரி இருந்தது!

பூஜா குமார் அந்த டாக்டரோட பேசும் காட்சியும், தீவிரவாதிங்க கிட்ட ஹைஜீன் பத்தி பேசறதும், டிஸ்யு பேப்பர் கேக்கறதுமா கதையின் ஊடே, குறிப்பா ஆரம்பத்தில் வரும் satire comedy செம.

நான் வேணும்னா அல்லானு கத்தட்டுமா,, எங்க கடவுள சிலுவைல அடிக்க மாட்டோம் கடல்ல தூக்கி போட்றுவோம்.. எந்தக் கடவுள் காப்பத்துவாருனு வசனங்கள்.. நச்..

அடுத்து கொலை செய்ய பட வேண்டியவன்கிட்டயே சிரிச்சுகிட்டே உதவி கேட்பது, வெடிகுண்டு பொத்தானை அழுத்தும் போது தீவிரவாதிக்கு ஏற்படும் கடைசிநொடி பதட்டம் போன்ற சீன்கள் படத்தோடு மேலும் ஒன்றி போக செய்கிறது..

சற்றே சறுக்கும் க்ளைமேக்ஸ், லாஜிக் ஓட்டைகள் அதிகம்..

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பற்றி படம் முழுக்க காமிச்சவங்க ஏன் தீவிரவாதம் அங்க அவ்வளவு தலைதூக்க காரணம்னு பட்டும் படாம சொல்லி இருப்பது சரியல்ல. ஒருதலைபட்சமானது.

தேவையே இல்லாத, சர்ச்சைக்குரிய "சில" வசனங்கள்/காட்சிகள் நீக்கினால் நன்று.. சும்மா கெடக்கற சங்க ஊத வேண்டாமே..

தமிழ்ல கிட்டதட்ட "ட்ரூ லைஸ்" அளவுக்கு வந்திருக்க வேண்டிய ஆக்சன் படத்துக்கு ரியாலிட்டி டச் குடுக்குறேன்னு போய் மாட்டிகிட்டாரு கமல்னு தோணுது..

கமல் - திறமையில் நிச்சயம் ஹாலிவுட்காரர்களுக்கு சளைத்தவர் அல்ல, தமிழ் சினிமாவை அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து செல்வதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு.. தவளைகளா இல்லாம ஏணியா இருந்து தூக்கி விட முடியாட்டியும் கூட பரவாயில்லை - தயவு செய்து அவரை ஒரே அடியா முடக்கி போட்றாதிங்க. ரியல் எஸ்டட், கல்யாண மண்டபம், அரசியல்னு போகாம தொழில் மேல் இருக்கிற வெறிக்காக கமலுக்கு ஒரு ராயல் சல்யூட்.

படம் முழுக்க வன்முறை காட்சிகள் இருப்பதால் பெண்கள் முக்கியமா கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் பார்ப்பது சரியாகாது..

தவிர மற்றவர்கள் நிச்சயம் தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டிய படம்.. குறிப்பா ஆக்சன் பட ரசிகர்கள்.. 

கொசுறு: பாவம் கமல் - அடுத்ததா ஆப்கான் மொழி படத்துல நடிப்பாருனு அறிக்கை விட வேண்டிய அரசியல் ஆசைகள் இல்லாம வெகுளியாவே வளர்ந்துட்டாரு ;-)