Wednesday, November 18, 2009

வெளவால தீயில போட்டு

ஒரு குட்டி பதிவு

இன்னிக்கு எதோ படிச்சு கிட்டு இருந்த போது
this is THE property of ... னு வந்தது..

நான்: திஸ் இஸ் தீ பிராப்பர்டி....

பொ: 'தீ' பிராப்பர்டினு சொல்லக்கூடாது.. நெறையா பேர் இப்படி தான் சொல்றாங்க..

ம.சா: சரி, சொல்லிட்டு போகட்டும்.. ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டா

பொ: வெளவல் (vowels) க்கு தான் 'தீ'னு உச்சரிக்கனும்

ம.சா: ஏன் வெளவாலுக்கு தீ ரொம்ப புடிக்குமா?? சுட்டு சாப்பிட்டதே இல்லியே!! அப்ப காக்காவுக்கு தண்ணினு சொல்லனுமா..

நான்
: அப்படியா.. நீ ரொ....ம்ப புத்திசாலி

(பொ: பொண்டாட்டி, ம.சா: மனசாட்சி)


பதிவுக்குள்ள பதிவு: II

நமக்கு சீரியல்னாலே அலர்ஜி.. பொண்டாட்டியும் அவ்ளோவா பாக்க மாட்டா..
7மணி.. எதோ பாட்டு சத்தம்.. நீல கலர்ல இங்கியும் அங்கியும் ஓடிகிட்டுருந்தாங்க..

பொ: விஜய் டிவீல மகாராணி சீரியல்ல பாட்டு நல்லாருக்கும்...
நான்: சரி, மியூட்ல வச்சி கேளு!!


பதிவுக்குள்ள பதிவு: III

ரொம்ப சமீபத்துல ரசிச்ச ஜோக்..
(அம்மா) அய்யய்யோ.. பொண்ணு வெள்ளி கிழமையும் அதுவுமா ஓடி போயிட்டாலே..
சந்தானம்: அப்ப சனிக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா?? பாரு எல்லாம் ஓடிப்போறதுக்கு ரெடியா வரிசையா உக்காந்துகிட்டு இருக்கிறத!!

(கண்டேன் காதலை)

வடிவேல், சந்தானம் காமெடி தனித்தனியா பாக்கவே சூப்பரா இருக்கும்..
இதுல திருப்பியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்துல நடிக்கறாங்களாம்.....

வடிவேலு அவரு பாணில நடிக்க, பேச அத சந்தானம் ஓட்ட... நல்லா ஹிட்டாச்சுனா ஒரு புது காம்பினேசன் கெடைக்கும்..

4 comments:

  1. நல்லாருக்கு தம்பி.:)

    ReplyDelete
  2. நன்றி சார்.. தமிழ்மணத்துல பதிவு செஞ்சிருக்கேன்... இன்னும் சேர்க்கை முடியல.. waiting list-ல இருக்கு

    ReplyDelete
  3. தமிழிஷ்லயும் போடுங்க.

    ReplyDelete
  4. நன்றி சார் தமிழிஷ்லையும் இணைச்சாச்சு..

    ReplyDelete