போன பதிவுல யாராவது விருப்ப பட்டா லோக்கல்ல நடந்த கூத்துகள பத்தி போடறேனு சொன்னேன்.. பதிவு ஆரம்பிச்சதிலிருந்து போன பதிவுக்கு தான் அதிகபட்ச ஹிட்ஸ்.. (ருசி கண்ட பூனை).. நான் ரொம்ப விருப்ப பட்டு எழுதின பதிவுகளுக்கு கூட இந்த அளவு ரெஸ்பான்ஸ் இல்ல.. எழுதற ஸ்டைல improve பண்ணனும் போல!!
Dadagiri - முதல்ல இந்த கூத்த கொஞ்சம் பாருங்களேன்!!
அந்த தொகுப்பாளினி செய்த தவறுகள்
1. பொது இடத்துல நாலு பேர் முன்னாடி கெட்ட வார்த்தை பேசினது
2. முதல்ல கைய நீட்டினது..
அதுக்கு அந்த பையன் திருப்பி அடிச்சதுக்கு அவனுக்கு பொது மாத்து!!
விவேக் மின்னலேல சொல்ற மாதிரி பொண்ணுங்க வேகமா போய் கீழே விழுந்தா நானுறு பேர் உதவிக்கு வருவாங்க.. பசங்கனா சங்குதான்!
இதே மாதிரி இன்னும் ஒரு காமெடி (Same Blood, ரொம்ப இழுவை)!!
இப்போ எந்த டிவிய போட்டாலும் ரியாலிட்டி ஷோங்கிற (Reality Show) பேர்ல அவனவன் டார்ச்சர் கொடுக்கிறாய்ங்க!! ஒன்னு ஏதாவது சண்டை, சச்சரவுனு போவும், இல்லினா அழுகாச்சியா இருக்கும்.. இதுல நெறையா மேட்டர் முன்னாடியே பேசி செட்டப் செஞ்ச மாதிரி இருக்கும்.. இதெல்லாம் டி.ஆர்.பி (TRP) ரேட்டிங்க அதிகபடுத்தி அது மூலமா விளம்பரங்களோட ரீச்ச அதிகமா காமிச்சி பணம் சம்பாதிக்கிற விசயம் தான்..
இது தமிழ் சானல்கள்ள சமீபமா தான் பிரபலம் (நன்றி: STAR & Vijay).. US/UK-ல இதுக்கு தாத்தாவெல்லாம் இருக்காங்க.. எனக்கு (தெரிஞ்ச) பிடிச்ச சில வீடியோக்கள் (நன்றி: YouTube)
முதல்ல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச வீடியோ.. நம்ப கோடிஸ்வரன் கணக்கான நிகழ்ச்சியோட(who wants to be a millionaire) இறுதி கேள்வியும் பங்கேற்றவரோட புத்திசாலித்தனமும்..