Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் - ஒரு வெகுஜன ரசிகனின் பார்வையில்


நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் - எந்திரன் படத்துக்கு கூட பதிவு எழுதல.. ஆனா என்னமோ இந்த படத்துக்கு எழுத தோணுச்சு..

தமிழ் படங்களை ஒப்பிட்டு மட்டுமே இந்த பதிவு. அவதார் அளவுக்கு 1000 கோடி செலவு செய்து எடுக்க இங்க சூழ்நிலை இன்னும் அமையவில்லைனு புரிஞ்சா சரி.


ஹாலிவுட் தரத்தை கிட்டதட்ட தொட்டுவிடும் அளவுக்கு நிறைய தொழில்நுட்ப விசயங்கள், பிரமாண்டம். தமிழ்ல முதல் முறையா இந்த அளவுக்கு அதிரடி ஆக்சன் படம் அமைஞ்சது இல்லைனு நிச்சயம் சொல்லலாம்.

ஆப்கான் தீவிரவாதி, அமெரிக்கா, வெடிகுண்டுனு எளிதில் ஊகிக்க கூடிய கதையிலும் நச்சுனு சில பல திருப்பங்களை வைத்தது படத்துக்கு மிகப்பெரிய பலம்..

சாதுவா வரும் கமல் கேரக்டர் சும்மா பிண்ணி பெடலெடுக்கிறாரு.. கெடைச்ச கேப்ல எல்லாம் ஸ்கோர் செஞ்சிருக்காரு (Completely Steals the show).

நடிப்பு.. நேர்த்தி!! என்னா ஒரு அர்ப்பணிப்பு உணர்வு.. கமல்-ரஜினிகிட்ட இருந்து இளைய தலைமுறையாகிய நம்ம கத்துக்க வேண்டிய முக்கியமான விசயம்.. இவ்வளவு தூரம் வளர்ந்துட்டோமே - இனி நம்மல யார் கேள்வி கேட்க போறானு அலட்சியம் இல்லாம நிறைய மெனக்கெட்டு நடிச்சிருக்காரு கமல்.  பூஜா குமாரும் - ஆண்ட்ரியாவும் அவர்களோட பங்கை சரியா செஞ்சிருக்காங்க.. வில்லனா வரும் நடிகர் செம மிரட்டல்.. நாசர் ஒருத்தர மட்டும் தான் சரியா பயன்படுத்திக்கலனு தோணுது..

பாடல்களை படத்தில் காட்சியமைப்புடன் பார்க்கும் போது இன்னும் ரொம்ப நல்லா இருக்குது.. முதல் பாடல் "உன்னை காணாத.." சூப்பர்.. கமல் கலக்கல்ஸ், ஆண்ட்ரியா அழகு! "அணு விதைத்த பூமியிலே" கண்ணீர்.

பிரமாண்டமான ஆப்கானிஸ்தான் பகுதிகள்.. செட் போட்டு எடுத்தாங்களா இல்ல நெசமானு பிரித்து பார்க்க முடியாத அளவு அருமை. தற்போது வரும் தமிழ் படங்கள்ல ஒளிப்பதிவுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒலிப்பதிவுக்கு தரப்படுவதில்லை.. விஸ்வரூபத்தில் அருமையான, மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு.. பல இடங்களில் பக்கத்து சீட்ல, பின்னாடி சீட்ல இருந்து கேட்கிற மாதிரி இருந்தது!

பூஜா குமார் அந்த டாக்டரோட பேசும் காட்சியும், தீவிரவாதிங்க கிட்ட ஹைஜீன் பத்தி பேசறதும், டிஸ்யு பேப்பர் கேக்கறதுமா கதையின் ஊடே, குறிப்பா ஆரம்பத்தில் வரும் satire comedy செம.

நான் வேணும்னா அல்லானு கத்தட்டுமா,, எங்க கடவுள சிலுவைல அடிக்க மாட்டோம் கடல்ல தூக்கி போட்றுவோம்.. எந்தக் கடவுள் காப்பத்துவாருனு வசனங்கள்.. நச்..

அடுத்து கொலை செய்ய பட வேண்டியவன்கிட்டயே சிரிச்சுகிட்டே உதவி கேட்பது, வெடிகுண்டு பொத்தானை அழுத்தும் போது தீவிரவாதிக்கு ஏற்படும் கடைசிநொடி பதட்டம் போன்ற சீன்கள் படத்தோடு மேலும் ஒன்றி போக செய்கிறது..

சற்றே சறுக்கும் க்ளைமேக்ஸ், லாஜிக் ஓட்டைகள் அதிகம்..

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பற்றி படம் முழுக்க காமிச்சவங்க ஏன் தீவிரவாதம் அங்க அவ்வளவு தலைதூக்க காரணம்னு பட்டும் படாம சொல்லி இருப்பது சரியல்ல. ஒருதலைபட்சமானது.

தேவையே இல்லாத, சர்ச்சைக்குரிய "சில" வசனங்கள்/காட்சிகள் நீக்கினால் நன்று.. சும்மா கெடக்கற சங்க ஊத வேண்டாமே..

தமிழ்ல கிட்டதட்ட "ட்ரூ லைஸ்" அளவுக்கு வந்திருக்க வேண்டிய ஆக்சன் படத்துக்கு ரியாலிட்டி டச் குடுக்குறேன்னு போய் மாட்டிகிட்டாரு கமல்னு தோணுது..

கமல் - திறமையில் நிச்சயம் ஹாலிவுட்காரர்களுக்கு சளைத்தவர் அல்ல, தமிழ் சினிமாவை அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து செல்வதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு.. தவளைகளா இல்லாம ஏணியா இருந்து தூக்கி விட முடியாட்டியும் கூட பரவாயில்லை - தயவு செய்து அவரை ஒரே அடியா முடக்கி போட்றாதிங்க. ரியல் எஸ்டட், கல்யாண மண்டபம், அரசியல்னு போகாம தொழில் மேல் இருக்கிற வெறிக்காக கமலுக்கு ஒரு ராயல் சல்யூட்.

படம் முழுக்க வன்முறை காட்சிகள் இருப்பதால் பெண்கள் முக்கியமா கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் பார்ப்பது சரியாகாது..

தவிர மற்றவர்கள் நிச்சயம் தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டிய படம்.. குறிப்பா ஆக்சன் பட ரசிகர்கள்.. 

கொசுறு: பாவம் கமல் - அடுத்ததா ஆப்கான் மொழி படத்துல நடிப்பாருனு அறிக்கை விட வேண்டிய அரசியல் ஆசைகள் இல்லாம வெகுளியாவே வளர்ந்துட்டாரு ;-)

4 comments:

 1. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
  அவசியம் தியேட்டரில் போய் ப் பார்த்துவிடுகிறோம்

  ReplyDelete
 2. "
  அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
  அவசியம் தியேட்டரில் போய் ப் பார்த்துவிடுகிறோம்
  "

  நன்றி சார் :)

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம்... எப்போ வரும் என்று தான் விஸ்வரூப மர்மமாக இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி.. கூடிய விரைவில் பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்படட்டும் :)

   Delete