Tuesday, February 5, 2013

சாலை சாகசம் செய்வதற்கு அல்ல

எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க அறிவுரைள் நிறைந்த பதிவு..
 
கீழே உள்ளவற்றை கந்தசாமியில் வரும் பட்சா பாட்டு போல படிக்கவும்..

சரக்கு

செல்போன்
அதிவேகம்
சிக்னல் ஜம்ப்
ஓவர் லோடு 
வேடிக்கை
சினிமா போஸ்டர்
ஷேர் ஆட்டோ
பூசணிக்காய்
ஹெல்மெட்

இதெல்லாம் டூப்பு.. நம்ம ஊரு டிரைவர் தான் டாப்பு!!

ஆனா மொக்கை போதும்.. நம்ம நாட்டுல (மற்றும் வெகு சில நாடுகள்ள) மட்டும் தான் இத்தனை அஜாக்கிரதைனு நெனக்கிறேன்.. கொஞ்சம் கூட விதிகள மதிக்கறதில்ல.. அதிகபட்சம் ஒரு வழிப்பாதை, டிரிப்பிள்ஸ் இத மட்டும் தான் கொஞ்சமாவது சீரியஸா எடுத்துகிறாங்க.. அதுவும் டிராபிக் போலிஸ் இருந்தா மட்டும்!ர்ணனோட கவசகுண்டலம் போ என்னமோ பொறந்ததுல இருந்தே கூட இருக்குமாதி்ரியே செல்போஒரு கைல பிடிச்சு பேசிகிட்டுதாசர்வகாலமும் வண்டி ஓட்றாங்க நம்ம ஆளுங்க.. ஜாலியா பேசிகிட்டு முன்பின் வர வண்டி, ஆளுங்கள பார்க்காம இவனுங்க பண்றது கிட்டதட்ட சர்க்கஸ் தான்.. ீழேவிழுந்தா செல்போனும் போச்சு நம்ம போனும் (Bone) போச்சு.. செல்போன் பேசிய படி வாகனம் ஓட்ட வேண்டாம்.. 

நமக்கு நம்ம உயிரும் முக்கியம் ரோட்ல போற மத்த (அப்பாவிங்க) உயிருக்கும், உடைமைக்கும் மதிப்பு இருக்கு.. so, தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்ட வேண்டாம்.. முடிஞ்சா தண்ணியே அடிக்க வேண்டாம் ;)

அவசரம் மற்றும் எந்த காரணங்களுக்காகவும் அதிவேகம் வேண்டாம்.. நமக்கு நடக்காது என்ற அஜாக்கிரதையே விபத்துக்களுக்கு காரணம்..வ்வளவு வேகமா போனாலும் அதிகபட்ச வித்தியாசம் 10 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை..

சில வருடங்களுக்கு முன்பு வண்டியிலிருந்து கீழே விழுந்தேன்.. வீடுகட்ட வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடப்பா கற்களில் "டமார்" என்று தலை மோதியது.. அடுத்த நாள் விடிந்ததும் பார்த்தால் ஹெல்மட்டில் பின் பகுதியில் செமத்தியாக அடிபட்டிருந்தது.. தலைக்கவசம் அணியாமல் சென்றிருந்தால் நிச்சயம் இன்று உட்கார்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.. தலைக்கவசம் நிச்சயம் உயிர் கவசம். காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவதும் விபத்துகளில் உயிர் காக்கும்.. 

சேலம் மாதிரி வளர்ந்து வரும் நகரங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பலமடங்கு பெருகிவரும்நிலையில் பெரும்பாலானோர் எந்த சாலைவிதிகளையுமே மதிப்பதில்லை.. நான்கு புறமும் குறுக்கும் நெடுக்குமாக ண்டிகளை ட்டுவது தோ மேட்ரிக்ஸ் பட சாகச காட்சிமாதிரிருக்கிறது.. இதில் தனியார் பேருந்துகளும், ஷேர் ட்டோக்களும் தலைசொறிய கையத்தூக்கினாக்கூட நடுவழியில் ப்படியே நிறுத்திவிடுகிறார்கள் ;-(

 

வண்டி ஓட்றவங்க தான்னு இல்ல, பாதசாரிகள் கூட பல சமயம் ரோட்ல குறுக்க வந்து விபத்த ஏற்படுத்துகிறார்கள்.. நம்ம வண்டிய சரியா ஓட்டிட்டு போனாலும் இவர்கள் அலட்சியத்தால வந்து வண்டியில விழறாங்க.. அடிபட்டதுக்கு அப்புறம் ஆயிரந்தான் காரணம் சொன்னாலும் விளைவுகள அனுபவிக்க போறது 100%  அவர்கள்தான்.. எனவே சாலையை கடக்கும் போது கவனம் தேவை.. செல்போன்ல கடலை போட்டுக்கிட்டே வந்து வினையை வாங்கிக்கட்டிகிட்டு போவாதீங்க..


High Beam (உயர்கற்றை) விக்குகள் நெடுஞ்சாலைகளில் ல்லது மிகவும் இருளான பகுதிகளில் உபயோகப்படுத்துவற்காக இருப்பவை, அதை சோடியம் விளக்கு நிறைந்த தெருக்களிலும் போட்டு எதிரில் வருபவரை தடுமாற செய்வது தறு.. அஜாக்கிரதையாக எதிரில வருபவனுக்கு நாம் அப்படிசெய்தால் - நமக்கு இன்னொருவன் ப்பு வைப்பான்! புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 4 - 6 வழி நெடுஞ்சாலைகளில் இரும்பிலான மீடியன்களுக்கு திலாக செடிகள் வர்த்து எதிரில் வரும் அதிக ஒளியை தடுத்திருப்பது பாராட்டுக்குரிது :-) 

வண்டி ஓட்றவன் மூடு அன்னிக்கு சரியில்லானா போச்சு - மத்தவன் மேல் இருக்கிற அத்தனை கோவத்தையும் ஹாரன் மேல காமிக்க வேண்டியது.. ஹாரனுக்கும் சைரனுக்கும் (Siren) வித்தியாசம் புரியாம ஹாரனடிச்சா உடனே ழிகிடைக்கும்னு நினைக்கிற முட்டாள்கள் நிறைய பேர் ங்கு உண்டு.. ஒலி மாசுபடுவது குறித்த யாருக்குமே விழிப்புணர்வு இன்னும் வரல.. என்னையும் சேர்த்து! பெங்களூர்ல திங்கட்கிழமைகள்ல "No Horn Day" அப்படினுட்டு விளம்பரங்கள் செய்து கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.. குறைந்தபட்சம் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் பக்கத்துலயாவது ஹாரன் ஒலிப்பதை குறைக்கலாம்..

கடைசியா பெங்களூர் டிராபிக் போலிஸ் முகநூலில் செய்துதரும் வசதிகள் நிச்சயம் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன..தாரணமா இப்ப ஒரு வண்டி "நோ பார்க்கிங்கில்" அல்லது நடைபாதைய மறிச்சு நிறுத்தி வச்சிட்டு போய்ட்டான்னு வச்சுக்குங்க.. சும்மா நம்ம செல்போன்ல ண்டியின் எண் தெரியும்படி ஒரு போட்டோ எடுத்து அவர்கள் முகநூல் பக்கத்தில் போட்டுட்டா போதும்.. உண்மைதன்மைய சரிபார்த்துட்டு அதற்கு உண்டான அபராதம் விதிக்கபடும்.. அன் அடுத்ததடவ மாட்டும்போது ஒரு பெரிய லிஸ்டே வரும் இதற்கு முன் பாக்கி வைத்திருக்கும் அத்துனை அபராதங்களும் சேர்த்துவைத்து வசூலிக்கப்படும்.. இது மட்டுமல்ல நம்ம கருத்துக்களையும் பகிர்ந்துக்கலாம் - நல்ல யோசனைகள் பெரும்பாலும் செயல்படுத்தப்படுகிறது.. நிறைய விழிப்புணர்வூட்டும் காணொளிகளும் அவ்வப்போது பதிவிடப்படுகின்றன.. நிச்சயம் இது ஒரு முன்மாதிரி நடவடிக்கை.. கிட்டதட்ட 60000 பேர் ண்பர்களா பதிவு செஞ்சிருக்காங்க.. :-)

புது கார் ஓட்டிகளுக்கு உதவும் ஒரு பக்கம்.. Things they don’t teach you at an Indian driving school 

குறைந்தபட்சம் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது..

தயவு செய்து தலைக்கவசம் (அ) சட் பெல்ட் அணியுங்கள்
குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்
சாலைவிதிகளை மதியுங்கள்
சாலையில் சர்க்கஸ் வேண்டாம்
லிப்பானை (Horn) தேவையின்றி பயன்படுத்த வேண்டாம்

குசும்பு: அண்ணே பின்னாடி ஒருத்தன் வண்டியே இல்லாம வர்ரான்.. அவன போய் முதல்ல பிடிங்க # கவுண்டர் பாறைகள் ;)

2 comments:

 1. சாலை அப்படி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற நியதி இருக்கா? மேலே சொன்ன அவ்வளவு காரணங்களுக்கும் மொத்த காரணம் அரசாங்கம் தான்.
  வேலை செய்யாத சமிக்கை விளக்குகள்.
  குண்டும் குழியுமான சாலைகள்.
  80’ சாலை 40’ ஆகி 10’ யில் வாகனம் போகும்.
  Oneway என்ற அறிவு இல்லாமல் இரவில் முழு விளக்கு வெளிச்சத்துடன் வண்டி ஓட்டிக்கொண்டு வருவது.
  ஒரு வண்டிக்கு பின்னால் மற்ற வண்டி வரவேண்டும் என்ற பொது அறிவு இல்லாத மக்கள்.அதை ஓட்டுனர் உரிமம் வழ்ங்குவதற்கு முன்பே சொல்லிக்கொடுக்காத Trainers.
  பாதசாரி நடக்க இடம் இல்லை அவ்வளவு ஆக்கிரமிப்புகள்.
  ஒவ்வொரு வண்டியின் விளக்குகள் வெவ்வேறு உயரத்தில் இதனால் இரவில் எதிர்திசையில் வரும் வண்டியின் விளக்குகள் கண்ணை குருடாக்கி விபத்துகளை உருவாக்கும்.இப்படிப்பட்ட வண்டிகளுக்கு யார் உரிமம் வழங்கியது?
  சென்னையில் மட்டும் இதெல்லாம் சரி செய்யனும் என்றால் (முழு மனதுடன்) இன்னும் 25 வருடம் ஆகும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி.. முகப்பு விளக்கு பிரச்சனைகள் இருப்பது உண்மை.. மக்களிடம் சாலை விதிகள்/பாதுகாப்பு விழிப்புணர்வு மிகக்குறைவாக இருப்பதாக தோன்றியதன் வெளிப்பாடே இந்த பதிவு.. முகப்புவிளக்கு பற்றி ஒருபத்தி சேர்த்துவிட்டேன்.. மீண்டும் நன்றிகள் :)

   Delete