Monday, November 16, 2009

ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம்.. நான் (வசந் என்கிற வசந்தகுமார்)* சேலத்துல* இருந்து வரேன்.. எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர்*, கொஞ்சம் ஜாவா* தெரியும்.. சேலம் - பெங்களூருக்கு* 200 கிமீ தான், 20 நிமிசத்துக்கு ஒரு பஸ்* இருக்கு.. so இப்போ நான் எங்க இருக்கேன் என்னா பண்றேனு கண்டுபிடிக்க மதுகோடாவ விட்டுட்டு CBI-ஆ வருவாங்க

இப்போ ரொம்ப recent-ஆ (ரெண்டு மூனு நாளா) தமிழ்மணத்துல பதிவுகள படிச்சதுல இருந்து நம்ம ஏன் ஒரு பதிவ ஆரம்பிக்க கூடாதுன்னு நெனச்சு இத ஆரம்பிச்சுட்டேன்*.. இதத்தான் Generation Y-னு சொல்றாங்களோ??

இத எழுதலாமுன்னு நெனச்ச போது US காரனே வேலய முடிச்சுட்டு வூட்டுக்கு போற டைம் ஆகியிருக்கும்.. பொண்டாட்டி என்ன ப்ளாஃக்-ஆ போடா பொறுக்கினு திட்டிட்டு திரும்பி தூங்கிட்டா*

மனசுல இருக்கறத அப்படியே எழுதினா அட்ரஸ் கண்டுபுடிச்சு வூட்டுக்கு ஆட்டோ எதாவது வராத வரைக்கும் நல்லது.. கன்னடா ரக்சனே காரனுங்களுக்கு தமிழ் படிக்க வராதுன்னும் நம்பிக்கை தான்.. எதோ படத்துல சொல்ற மாதிரி நம்பிக்கை தான வாழ்க்கைனு!!

நமக்கு தமிழ், தலைவர் (ரஜினிதாங்க*), சேலம், நண்பர்கள், ஜாவா, பயணங்கள், சரித்திரம், சிக்கன் (சாப்பிட மாட்டும்), ... , இதெல்லாம் ரொம்ப இஷ்டம்..

பாக்கலாம் இந்த முயற்சி எப்படி போகுதுன்னு!!

* - இதுக்கெல்லாம் ஒரு தனி பதிவே போடலாமுன்னு தோனுது

6 comments:

  1. வாங்க. அறிமுகமே கல கலப்பா இருக்கு:). word verification எடுக்கலாமே. பின்னூட்டங்கள் பாதிக்கப் படும்.

    ReplyDelete
  2. நன்றி.. word verification-அ எடுத்தாச்சு.. கலகலப்பு கை கலப்பாகதவரை நல்லது!

    ReplyDelete
  3. வாங்க தல!

    களத்துல இறங்கி கலக்குங்க!

    ReplyDelete
  4. Nice blogs machi..Keep rocking :)

    ReplyDelete
  5. thanks machi, just joined ur blog too

    ReplyDelete
  6. Good compilation Nanba, Thanks for the effort.

    ReplyDelete