Friday, January 1, 2010

கிதார் கத்துகிட்ட கதை



புத்தாண்டுக்கு சீரியஸா எதாவது போடலாமுனு பார்த்தா பொண்டாட்டி அத படிச்சு பார்த்துட்டு ரொம்ப அட்வைஸ் பண்ற மாதிரி இருக்கு அப்படீனு சொல்லிட்டா.. நமக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்குல புடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ் தான்.. so, காமெடியான ஒரு (மொக்கை) பதிவு.. புத்தாண்டுல இத படிச்சிட்டு ஒரு முறை சிரிச்சா கூட சந்தோசம்!!

வானம்பாடிகள் அண்ணணோட 'பொட்டி தட்ட போன கதை' யோட பாதிப்பு வராம இருக்க முயற்சி பண்ணியிருக்கேன்.. முடியல!!)

ஒரு 6-7 மாசம் முன்னாடி நம்ம ஆபிசுல Employee Club-ல இருந்து தீடீர்னு ஒரு இ-மெயில்.. அதாகபட்டது, வாரா வாரம் புதன் கிழமைகள்ள கிதார் (Guitar) கத்து கொடுக்கப்படும்.. அதுவும் வாத்தியார் நேரா ஆபிசுக்கே வந்திடுவார்னு!!

அட்றா சக்கை, இத்தனை நாள் நமக்கு உள்ளுக்குள்ள இருந்த ஒரு இசை யானைய (ஞானிய) தட்டி எழுப்பி்ட்டாங்க..  உடனே இளையராஜா அளவுக்கு ஃபீல் பண்ணி "என் இனிய பொன் நிலாவேனு" உள்ளுக்குள்ள ஓட ஆரம்பிச்சிடிச்சு.. சரினு எவ்ளோ பீஸ் என்னானு விசாரிச்சு ரெஜிஸ்டரும் பண்ணியாச்சு...

அடுத்தது என்ன? ஒரு நல்ல கிதார் வாங்கணும்.. என்னோட வேலை செய்யும் நண்பருக்கு கிதார் வாசிக்க தெரியும்.. (அவருக்கு தெரிஞ்சதே ரெண்டு மூனு பாட்டுதான்.. யாராவது வாசிச்சு காமிக்க சொன்னா மூனாவத முடிச்சுட்டு திரும்பியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சிடுவாரு).. சரினு அவர கூட்டிட்டி போய் பெங்களூர் ஜெயா நகர்ல ஒரு கடைல நல்லா பெருசா, வெய்ட்டா ஒரு கிதாரும் வாங்கியாச்சு..

நேரா அலுவலகம் முடிஞ்சு வீட்டுக்கு எடுத்துட்டு வந்து ஆர்வமா திறந்து பார்த்தா ஒரு பெரிய அதிர்ச்சி.. பொண்டாட்டிகிட்ட கத்தி சொன்னேன்..

"ஏய், கிதார் மட்டும் தான் இருக்கு.. அந்த குச்சியை காணோம்!!!!!!!!!"

(அவ கடுப்பாயிட்டு சொன்னா)

குச்சியா.. 

டேய், அது வயலின்டா!!

(பசங்க படத்துல வர டயலாக் மாதிரி படிக்கவும்.. "புஜ்ஜிமாவா? அவன் குழந்தைடா" மாதிரி!!)

அட பாவிங்களா, ஏமாத்திடானுங்களா.. ரெண்டு்ம் பார்க்கறதுக்கு ஒரே மாதிரி தான் இருக்குது.. சரிப்போ.. ஏதோ இருக்கறத வச்சி ஒழுங்கா கத்துகிட்டா சரினு இருக்கிற கம்பிய எல்லாம் மேல இருந்து கீழ வரைக்கும் சுண்டி பார்த்துட்டேன்.. சொய்ங்.. சொய்ய்ய்ங்னு ஈ close-up ல காதுக்கு பக்கத்துல சுத்தற மாதிரி தான் ஒரு சவுண்டு..

எப்படா புதன்கிழமை வரும்னு வெயிட் பண்ணி கிழம்பிட்டேன்.. ஸ்பெளெண்டர் எடுத்துகிட்டு கிதார வைக்க இடமில்லமா முதுகுல மாட்டிகிட்டு லேப்டாப்ப தூக்கி முன்னாடி மடில வச்சுகிட்டு கிளம்பிட்டேன்.. வழியில அவனவன் ஆச்சரியமா பாத்தானுங்க..

ஆபிஸ்க்கு உள்ள நுழையும் போது செக்யூரிட்டி தடுத்து நிறுத்திட்டாங்க.. வண்டிய விட்டு இறங்கி ஓப்பன் பண்ணி காமிச்சா.. கித்தார பாத்துட்டு அவுங்களுக்கு பயங்கர கடுப்பு.. அவனவன் துப்பாக்கி மாதிரியே தூக்கிட்டு வந்து ஏண்டா எங்க உசிர எடுக்கீறங்கனு இந்தில பேசிகிட்டாங்க...

ஆகா நம்மள மாதிரியே நெறையா பேர் கிளம்பி இருக்கானுங்க போல இருக்கேனு நெனச்சுட்டு சாயங்காலம் வரை வெயிட் பண்ணினேன்..

சரியா ஆறு மணி குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி, முனியப்பன எல்லாம் நல்லா வேண்டிகிட்டு கிளாஸ்க்கு போனா.. அங்க ஒரே சத்தம் ஆளாளுக்கு கிதார கையில புடிச்சுகிட்டு டொய்ங்.. டொய்ங்னு வாசிச்சு பார்த்துகிட்டு இருந்தாங்க..

சரி நம்மளும் ஆரம்பிச்சுடுவோம்னு மாஸ்டர பார்த்து விசயத்த சொன்னேன.. அப்படியே ஒரு ஓரமா உக்கார சொன்னார்.. சரினு போய் ஒரு இடத்துல உக்காந்துட்டு மத்தவங்கள பார்த்து அதே மாதிரியே புடிச்சிட்டு நானும் டொய்ங்.. டொய்ங்னு ஆரம்பிச்சிட்டேன்..



கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம பக்கமா வந்த மாஸ்டர் கிதார வாங்கி அந்த பக்கம் வச்சிட்டு நோட்டு, பேனா இருக்கானு கேட்டார்.. என்னது நோட்டு பேனாவா?? இங்கயும் முதல்ல தியரியானுட்டு அவரு காமிச்ச நோட்ட பாத்து அட்டை காப்பி அடிச்சேன்..

அட இந்த E, B, G, D, A, E ங்கற ஆறே எழுத்த மாத்தி மாத்தி எத்தனை விதமா எழுதியிருக்காய்ங்க... ஒரு மணி நேரம் தியிரி வகுப்ப எடுத்தாரு.. என் கூட ஒரு நண்பரும் அன்னிக்கு தான் சேர்ந்தாரு..

மாஸ்டர்: உங்களுக்கு மியுசிக் மு்ன்னாடியே கத்துகிட்ட அனுபவம் இருக்கா??
நண்பர்: ஆமாம்.. முன்னாடியே கொஞ்ச நாள் புல்லாங்குழல் கத்துகிட்டேன்..
நான்: (மனசுக்குள்ள.. அய்யோ சொல்லவே இல்ல.. நம்மள முந்திடுவாரோ?? இவரு ஆறரை அடி உயரம்.. இவரு உயரத்துக்கு புல்லாங்குழலே சிகரெட் மாதிரி தான் தெரியும்) இல்ல சார் இது தான் முதல் டைம்..

மாஸ்டர்: சரி, இசைல மொத்தமா எத்தன ஸ்வரம் இருக்கு சொல்லுங்க?
நான்: ?!?!,?!,;;;
நண்பர்: ஏழு சார்.. சரிகமபதனி
நான்: ஐயே இது தானா சுவரம்கறது.. அப்படியே பழைய பாட்டு ஒன்னு ஞாபகம் வந்தது.. "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்".. ராகமா.. உடனே அடுத்த கேள்வி ராகத்த பத்தி கேட்பாரோனு 7*7 = 49ஆ இருக்குமோ...சும்மா அடிச்சு உடலாமுன்னு நினைச்சிகிட்டேன்..

மாஸ்டர்: சரி, இதுல இருக்கிற ஒவ்வொரு கம்பியும் ஒரு ஸ்வரம்னாரு..
(எனக்கு திருப்பியும் ஒரு ஷாக்.. ரெண்டு மூனு தடவ எண்ணி பாத்துட்டு சொன்னேன்..)
நான்: சார்ர்ர்ர், என்னுதுல ஆறு தான் சார் இருக்குது.. ஒன்னு எதாவது பிஞ்சி கிஞ்சி போயிருக்குமோ??
அவரு கடுப்பாயிட்டு அதெல்லாம் ஒன்னும் இல்ல ரெண்டு ஸ்வரத்துக்கு ஒரே கம்பிதான்னு சொன்னார்.. அது எதுன்னு இப்போ மறந்து போயிடுச்சு.. (மனசுக்குள்ள,, கஞ்ச பயலுக அதுக்கு தனியா இன்னொரு கம்பிய வச்சா கொறைஞ்சா போயிடுவானுங்க??).. இன்னும் கொஞ்ச நேரம் தியரிய continue பண்ணாரு..

மாஸ்டர்: சரி, இப்ப நான் உங்களுக்கு கிதார எப்படி புடிக்கறதுனு கத்து தரேன்.. (கிதார இப்படி புடிங்கன்னு அவரு வச்சி காமிச்சாரு)..

நானும் அவர மாதிரியே வச்சேன்.. இன்னும் கொஞ்சம் கைய முன்னாடி கொண்டு வாப்பானாரு..

சார், தொப்பை இடிக்குது.. இதுக்கு மேல முடியலனு சொன்னேன்... சரினு அவர் வந்து சரியான ஆங்கிள்ள கிதார்ர வச்சிட்டு போனாரு..

அப்படியே மேல இருந்து கீழ, கீழ இருந்து மேல ஒவ்வொரு கம்பியா வாசிக்க சொன்னாரு.. இந்த தொப்பைய வச்சிகிட்டு குனிஞ்சு பார்த்தா கீழ இருக்கிற கடைசி கம்பி சரியா எட்ட மாட்டீங்குது.. கண்ணுல வேற Blur ஆன மாதிரி தெரியுது.. சரி, அப்புறமா ஒரு நல்ல கண் டாக்டர போயி பார்க்கலாமுன்னு நெனச்சிகிட்டேன்..

ஒரு வழியா அந்த வார க்ளாஸ் முடிஞ்சது.. அடுத்த வாரம் திருப்பி அதே மாதிரி, ஆனா பாக்காம ட்ரை பண்ண சொன்னாரு..

ஆகா, கிளிஞ்சது கிருஸ்ணகிரி.. பாத்து வாசிச்சாலே நடுவுல ஒன்னு ரெண்டு மிஸ் ஆயிடுது.. இதுல பாக்காம வேறயானு.. வாசிக்க ட்ரை பண்ணினேன்.. நடுவுல அடிக்கடி கட்டை விரல் வேற போய் போய் ஏதாவது கம்பில மாட்டிகுது...

(அப்ப அங்க கொஞ்சம் சீனியர்ஸ் நல்லா ப்ராக்டீஸ் பண்ணிகிட்டு இருந்தாங்க..) பரவாலையே நம்ம வாசிச்சா கூட இவ்ளோ நல்லா சத்தம் வருதேனு பீல் பண்ணி வாசிச்சு கிட்டு இருந்தேன்... தீடிர்னு பக்கத்துல இருக்கறவங்க நிறுத்தி கவனிச்சிட்டு.. தம்பி, கொஞ்சம் மெதுவா வாசிப்பானாங்க.. அடக்கடவுளே இவ்ளோ நேரம் வந்துகிட்டு இருந்த சத்தம் நம்ம கிதார்ல இருந்து வரலையா????

கொஞ்ச நேரம் மெதுவா வாசிச்சு வாசிச்சு பாத்துட்டு நேரா கிதார தூக்கிட்டு போய் மாஸ்டர்கிட்ட சொன்னேன்.. "சார், என் கிதார்ல இருந்து மட்டும் சரியா சத்தம் வரவே மாட்டீங்குது.. ஏதாவது ப்ராப்ளம் இருக்கானு பாருங்களேன்.."

அவரும் கொஞ்சம் சீரியஸா கம்பில டென்சன் எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டு எல்லாம் சரியாதான் இருக்கு அப்படீனுட்டாரு..

அன்னிக்கு என்ன மாதிரி இன்னும் நெறையா பேர் புதுசா வந்திருந்தாங்க.. திருப்பியும் அதே தியரி க்ளாஸ் முதல்ல இருந்து.. இந்த தடவ புதுசா ஒரு கேள்வி வந்தது.. நமக்கு சீனியர்ஸ் எல்லாம் சின்னதா ஒரு அட்டை மாதிரி (Guitar Pick) ஒன்ன விரலுக்கு நடுவுல வெச்சு வாசிச்சுகிட்டு இருந்தாங்க.. (இத முதல்ல ஏதோ அழுக்கு எடுக்கறதுக்கோ இல்ல ஸ்குருவ டைட் பண்றதுக்கோனு நெனச்சி கிட்டு இருந்தேன்!!)

உடனே நாங்க, சார் எங்ககிட்டயும் இது மாதிரி இருக்கு, எங்கள மட்டும் ஏன் விரல்ல வாசிக்க சொல்றீங்க.. கட்டை விரல் ரொம்ப வலிக்குதுனோம்..

அதுக்கு அவர் ஒரு சின்ன உதாரணம் சொன்னார், அதாவது அம்பாஸிடர் கார ஓட்ட கத்துகிட்டா மத்த எல்லா காரையும் ஈசியா ஓட்டிலாம்.. so, கட்டை விரல்ங்கறது அம்பாசிடர் மாதிரி.. அந்த அட்டை மாருதி 800 மாதிரி.. so, இப்போ சொல்லுங்க உங்களுக்கு அம்பாசிடர் வேணுமா இல்ல மாருதி800 வேணுமா??

நாங்க எல்லோரும் கோரஸா.. எங்களுக்கு மாருதி 800 தான் வேணும்..

ஆஹா பயபுல்லைக தெளிவா இருக்கானுங்களேனு, சரி, இப்ப அந்த அட்டை அம்பாசிடர் மாதிரி விரல் மாருதி 800 மாதிரி.. இப்போ சொல்லுங்க எது வேணும்??

இந்த தடவ நாங்க திருப்பியும் கோரஸா, எங்களுக்கு அம்பாசிடர்தான வேணும்!!!..

இந்த சாப்ட்வேர் பயலுக புத்திய லேட்டா புரிஞ்சிகிட்ட அவர், தெளிவா அந்த அட்டைய இப்போதைக்கு தர முடியாதுன்னுட்டாரு!

அதுக்கப்புறம் ரெண்டு மூனு வாரத்துக்கு போயிட்டு வந்து வேல பிசியில அப்படியே கொஞ்சம் கொஞ்சமா Discontinue ஆயிடிச்சி..

இப்போ எங்க ஆபிஸ்ல எல்லாரும் என்னோட சைக்கிள second-hand ஆ வாங்கினா கிதார் இலவசம்னு கிண்டல் பண்றாய்ங்க!!

கொசுறு செய்தி: நமக்கு கிதார் கத்து கொடுக்க நெனச்சவரும் லேசுபட்டவர் இல்ல.. இப்ப ஆறாவது வனம்கற படத்துக்கு மியுசிக் டைரக்டர்!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

8 comments:

  1. ஏங்க, இன்னும் கொஞ்ச நாளைக்காவது கிளாசுக்கு போனீங்கன்னா கடைசி அந்த குச்சியாவது கிடைக்குமே.

    ReplyDelete
  2. இல்லீங்கண்ணா.. நம்ம சிற்றறிவுக்கு இசையெல்லாம் எட்டாது, பெரிய விசயம்னு விட்டு்ட்டேன்

    ReplyDelete
  3. கிடார் தப்பிச்சது. இசை உலகம் தப்பிச்சது. ஒரு நகைச்சுவை ப்லாக் நமக்கு கிடைச்சது.

    ReplyDelete
  4. கிதார் இன்னும் முழுசா தப்பிக்கல.. பரண்ல இருக்கு.. பாக்கலாம் திரும்பி ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு!!

    ReplyDelete
  5. பரணில் இருந்து இறக்கி, கற்றுக் கொண்டு புகழ் பெற நல்வாழ்த்துகள் சேலம் வசநத்

    ReplyDelete
  6. // cheena (சீனா) said... கற்றுக் கொண்டு புகழ் பெற நல்வாழ்த்துகள் //

    நன்றி. (மனசுக்குள்ள, ஆஹா இன்னுமா நம்பள நம்பறாய்ங்க!!!)

    ReplyDelete
  7. நகைச்சுவையாக எழுதுவது என்பது எல்லாராலும் இயலாது. உங்களுக்கு கை வந்திருக்கிறது. மேலும் எழுதவும். மிகவும் அருமை

    ReplyDelete
  8. ஆமாங்க. சிகப்பு வரிகளில் உங்க நகைச்சுவை ஓட்டம் மிக அதிகமாக புலப்பட்டது. நல்லாருக்கு.
    (நான்: சார்ர்ர்ர், என்னுதுல ஆறு தான் சார் இருக்குது.. ஒன்னு எதாவது பிஞ்சி கிஞ்சி போயிருக்குமோ??--->அருமை. வி.வி.சி.:-)

    ReplyDelete