Tuesday, December 1, 2009

21 பல் முளைத்த சைக்கிள்



சின்ன வயசுல சைக்கிள்னா ரொம்ப ஆசை.. சேலத்துல NSR,NKPனு சைக்கிள் கடைகள்ள வார இறுதி ஆனா வரிசைல நின்னு மணிக்கு 1 ரூபாய்னு வாடகைக்கு எடுத்துட்டு ஊர் முழுக்க சுத்துவோம்.. சைக்கிள் உயரமே ரெண்டோ மூனோ அடிதான் இருக்கும்.. கடைசி அஞ்சு பத்து நிமிசம் இருக்கும் போது சைக்கிள் சும்மா பறக்கும்.. விடவே மனசு இல்லாம திருப்பி கொண்டு போய் விட்டுட்டு வருவோம்.

வீட்ல கூட அப்பா சின்ன வயசுல ஓட்டின ஒரு (சின்ன) பழைய சைக்கிள் இருந்தது.. முழுக்க இரும்பு.. டயரே கிடையாது! சின்னதா ஏதோ பெல்ட் மாதிரி ரிம்ம சுத்தி இருக்கும்.. கடா முடானு ஓடும்.. பிரேக்கல்லாம் நோ சான்ஸ்!!

போன வருசம் ஜெர்மன் போயிருந்தபோது அங்க சைக்கிளுக்கு இருக்கற மவுச பாத்துட்டு நமக்கும் அந்த மாதிரி ஒரு கியர் வச்ச சைக்கிள் வாங்கனுமுனு ஆசை வந்திடுச்சி..
அவனவன்(ள்!!) அழகழகா[;)] சைக்கிள் ஓட்டிட்டு போறதும், ஏதோ ஒலிம்பிக்ஸ்ல மெடல் வாங்குன வீரன் மாதிரி உடம்ப மெயின்டெயின் பண்றதும் ஆச்சரியமா இருந்நதது..
நம்ம ஊர்ல நடக்கறதுக்கு இருக்கற மாதிரி அங்க சைக்கிளுக்கினே தனி ட்ராக் போட்டு இருந்தாங்க.. அதுல நடந்து போனா கூட கோபமா முறைப்பானுங்க..
அதே போல அங்கங்க சைக்கிள கட்டி வைக்க அழகழகா நெறயா கம்பி பதிச்சு இருந்தது..

இப்ப நம்ம கதைக்கு வருவோம்.. அந்த மாதிரி கியர் சைக்கிள் வாங்குற ஐடியா மனசுல துளிர் விட்டுடிச்சி.. ஆபிஸ்லயும் நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேர் அதே ஐடியால இருந்தாங்க.. வீட்ல சொன்னா வில்லி (பொண்டாட்டி) வேனவே வேண்டாங்கிறா.. பல நாள் சொல்லி சொல்லி ஒரு வழியா அவ சம்மதம் வாங்கப்பட்டது..

சரினு ஒரு சுபயோக சுபதினத்தில நாங்க எல்லோரும் (பெங்களூர்ல) ஒரு சைக்கிள் கடைக்கு போனோம்.. எங்க பட்ஜெட் அதிக பட்சம் எட்டாயிரமுன்னு முடிவு..

அதுக்க தகுந்த மாதிரி FireFox ங்கிற மாடல் காண்பிச்சாங்க.. பேர்லயே ஒரு அட்ராக்ஃஷன் (தொழில் புத்தி).. சரினு ஓட்டி பாத்தோம் ரொம்ப நல்லாயிருந்தது.. கிட்டதட்ட முடிவு பண்ணி பில் கட்ட் போறோம்..

FireFox பக்கத்துலயே Trekனு ஒரு மாடல்..


இப்ப கொஞ்சம் STD (வரலாறுங்கோ!!)
சைக்கிள் பொறுத்த வரை Tour de France அப்படீங்கற போட்டி ரொம்ப பிரபலம்.. கிட்டதட்ட 21 நாள் தொடர்ச்சியா France ஆல்ஃப்ஸ் மலைகள்ள 3500+ கி.மீ னு தவிடு திங்க வைக்கும் போட்டி..

லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங் (Lance Armstrong) னு ஒருத்தர் தான் champion..
இதுல்ல நம்ம ஆளு Trek யூஸ் பண்ணி 7 முறை தொடர்ச்சியா ஜெயிச்சிருக்காரு.. அட சைக்கிளுக்கு ஒரு மைக்கேல் ஃஸ்மேக்கர்னு வச்சுக்கங்களே
...
...
...

இப்ப நான் எங்க இருக்கேன்.. (ஒரு கவுண்டமணி ஜோக்: அது என்னடா மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிக்கனுங்க எல்லாம் இதே கேள்வி கேக்கறீங்க.. இங்க மயக்கம் போட்டு என்னா அமெரிக்காவுலயா எந்திரிக்க போற)

ஆங்.. சைக்கிள் கடைல ட்ரெக் ரக சைக்கிள் பக்கத்துல.. சரி சும்மா ஒரு டெஸ்ட் ரன் பண்ணி பாக்கலாம்.. இதுக்கெல்லாம் என்னா காசா கேக்க போறாங்கனு நம்பீஈஈ ஏறி உக்காந்து பெடல்ல ஒரு ரெண்டு மிதி.. சும்மா காத்து மாதிரி போகுது.. 21 கியரு.. சும்மா கியர் மேல போக போக இன்னும் ஃப்ரீயா போகுது.. ஒரு கட்டத்துல வேகத்த கட்டுபடுத்தி அந்த சின்ன எடத்துல ஓட்டவே முடியல.. அடடா இது என்னடா மதுரைக்கு வந்த புது சோதனை!!

திரும்பி நாங்க (ஃப்ரெண்ட்ஸ்) எல்லாம் ஒரு வட்ட மேஜை மாநாடு.. எல்லாருக்கும் ஒரே குழப்பம்.. சரினு ஆபிஸிக்கு வந்துட்டோம்.. ஒரு வாரம் பயங்கர டிஸ்கஷன்.. ஆளாளுக்கு அட்வைஸ்.. இருபதாயிரம் போட்டு சைக்கிளா.. அவ்ளோ காசு போட்டு வாங்கி என்னா பண்ண போறீங்க.. கம்மி விலைல வாங்குனா தான் நல்லா எக்ஸர்சைஸ் பண்ண முடியும்.. மீண்டும் ஒரே குழப்பம்..

கிட்டத்ட்ட ரெண்டு வாரம் கழிச்சு ஒரு முடிவு பண்ணி போய் ட்ரெக் புக் பண்ணிட்டோம்.. கண்ணு முன்னாடியே part-by-partஆ assemble பண்ணி தந்தாங்க.. ஹெல்மெட் அது இதுன்ன extra fittings வேற..

இத எழுதும் போது நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன்.. தம்பி தங்கி இருக்கற வீட்டு ஓனர் Trekக்கு தாத்தா மாதிரி சூப்பரா ஒரு சைக்கிள் வச்சிருக்காரு.. ஆளாளுக்கு இதே மாதிரி..

சரி சைக்கிள் வாங்கின கதை போதும்.. அத ஓட்டினது,சில Benefits and Disadvantages..

சில Benefits
1. நம்மள மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு நல்ல exercise.. சும்மா ஆபிஸ்க்கு எடுத்துட்டு போய்ட்டு வந்தாலே தினமும் 5-6 கி.மீ சைக்கிள் ஓட்டன மாதிரி ஆச்சி
2. ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கும்.. சும்மா லொங்கு லொங்குனு மிதிக்காம பஞ்சு மாதிரி இருக்கும்.. மேடு வந்தா 2-3னு கியர்ல மிதிக்கறதே தெரியாது.. இறக்கத்துல சும்மா 18-21 கியர்ல பறக்கும்!!
3. சீட்டிங் மத்த இத்யாதியெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க, முதுகு வலி அது இதுனு ரொம்ப தொந்தரவு வராது..
4. ஓட்டும் போது சின்ன பசங்க மாதிரி ரொம்ப யூத்தா ஒரு ஃபீலிங்

சில Disadvantages
1. பெங்களூர்ல பைக்ல போறவனையே மதிக்க மாட்டாங்க.. சைக்கிள்னா நடந்து போறவன்ல இருந்து பஸ்காரன் வரை டார்ச்சர் பண்றாங்க
2. மழை காலத்துல ரொம்ப பிரச்சினை (பைக்குக்கும் same blood)
3. பத்திரமா வச்சிருக்கறதும் ரொம்ப கஷ்டம்.. ரோட் சைட்ல பார்க்கிங் பண்ணினா கூட எவனாவது ஈசியா தூக்கிட்டு போய்டுவானோனு பயம்

ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போக முடியலனு பொண்டாட்டி டார்ச்சர் வேறனு நான் சொல்லல!!

6 comments:

  1. வசந்து அண்ணா,
    எனக்கும் இந்த மாதிரி சைக்கிள் வாங்கனுமுன்னு ரொம்ப நாளா ஆச ,
    பெங்களூருல எங்க வாங்கநீங்கனு கொஞ்சம் சொல்லுங்கன்னா .

    அப்பறம் நானும் சேலம் தான்,

    உங்க எழுத்து நல்ல இருக்குது கலக்குங்க.

    ReplyDelete
  2. //சைக்கிள்னா நடந்து போறவன்ல இருந்து பஸ்காரன் வரை டார்ச்சர் பண்றாங்க//

    //ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போக முடியலனு பொண்டாட்டி டார்ச்சர் வேறனு நான் சொல்லல!! //

    நச் வரிகள்.நல்ல பதிவு.

    ReplyDelete
  3. //வசந்து அண்ணா,//

    அண்ணனா?! ஐயையோ.. நாமெல்லாம் ரொம்ப சின்ன பையனுங்க..

    //எனக்கும் இந்த மாதிரி சைக்கிள் வாங்கனுமுன்னு ரொம்ப நாளா ஆச ,
    பெங்களூருல எங்க வாங்கநீங்கனு கொஞ்சம் சொல்லுங்கன்னா .//

    ஏகபட்ட இடத்துல கிடைக்குது.. நான் ட்ரை பண்ணின ரெண்டு option..

    நான் வாங்கினது.. ஜெயா நகர்ல இருக்கற Jayant Cyclz & Fitness Zone.. சைக்கிள் வாங்கினதோட சரி இன்னும் சர்வீஸ் எதுக்கும் எடுத்துட்டு போகல.. so at ur own risk--
    http://bangalore.justdial.com/jayant-cyclz-and-fitness-zone_jayanagar_Bangalore_vahrveFPhlq.htm

    2nd option.. ran by few young interested people.. again @ ur own risk--
    http://bumsonthesaddle.com/

    other options..
    http://bikeszone.com/forum/viewtopic.php?f=4&t=1608#p13207

    ReplyDelete
  4. //சைக்கிள்னா நடந்து போறவன்ல இருந்து பஸ்காரன் வரை டார்ச்சர் பண்றாங்க//

    //ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போக முடியலனு பொண்டாட்டி டார்ச்சர் வேறனு நான் சொல்லல!! //

    நச் வரிகள்.நல்ல பதிவு.

    நன்றி!!

    ReplyDelete
  5. "பத்திரமா வச்சிருக்கறதும் ரொம்ப கஷ்டம்.. ரோட் சைட்ல பார்க்கிங் பண்ணினா கூட எவனாவது ஈசியா தூக்கிட்டு போய்டுவானோனு பயம்

    ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போக முடியலனு பொண்டாட்டி டார்ச்சர் வேறனு நான் சொல்லல!! " .........இரண்டு டயரில் வந்த டபுள் torture.

    ReplyDelete
  6. // .........இரண்டு டயரில் வந்த டபுள் torture. //

    நன்றி சித்ரா.. சின்ன சின்ன தொந்தரவு இருந்தாலும் மொத்தமா பார்க்கும்போது நல்ல அனுபவம் **

    ** சைக்கிள எவனாவது தூக்கிட்டு போகாத வரை

    ReplyDelete