Saturday, December 19, 2009

வலைசுத்தி - சொடுக்குங்க சொடுக்குங்க!!



நம்ம இந்த பதிவுல பார்க்க போறது இணையத்துல பிரபலமான ஒரு சேவையான StumbleUpon பத்தி.. நான் இதுக்கு இப்ப வச்சிருக்கிற செல்ல (தமிழ்) பெயர் வலைசுத்தி (நம்மள மாதிரி இது ஒரு ஊர்சுத்தி போல)..

நான் இப்போ முக்கியமா வேலை செய்யறது Enterprise 2.0 / Web 2.0 அப்படீங்கிற துறையில தான்.. அதாவது இணையத்தை மையமா வச்சு தரப்படுகிற சேவைகள்.. அதனால இந்த மாதிரி கொஞ்சம் புதிய கருவிகள அல்லது சேவைகள தெரிஞ்சுக்கறதுல ஒரு ஆர்வம்..

சரி, இப்ப வலைசுத்தினா (அதாவது StumbleUpon) என்ன?
இப்ப நம்ம நண்பர் ஒருத்தரு ஊர் ஊரா சுத்தறாரு, நெறைய படம் பாக்குறாரு, மியுசிக் கேட்கறாரு, நெறையா விசயம் தெரிஞ்சிருக்காறுனு வச்சுக்கங்களேன்.. அவர்கிட்ட அடிக்கடி கேட்டு refer பண்ணிக்கிறோமில்ல.. அது மாதிரி விசயம் தாங்க இது.. (சச்சின்ல வர மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை சாரு சாருன்னு சொல்றீங்களேண்ணே)

அப்படீனா கூகுளாண்டாவருக்கு தெரியாததா இல்ல விக்கிபீடியாவுல இல்லாததா நம்ம வலைசுத்திக்கு தெரிய போவுதுனு சண்டைக்கு வராதீங்க..

அப்படியெல்லாம் இல்ல..

என்னா, இவுங்க கிட்டயெல்லாம் போய் நாம தேடுற விசயத்த சொல்லி கேட்டாதான ஒழுங்கா பதில் கிடைக்கும்.. இல்லனா குப்பைதான்..

அப்ப நம்ம ஆளு??
நமக்கு விருப்பமான விசயங்கள (Interests) இவருகிட்ட ஒரு முறை சொல்லிட்டா போதும்.. ஒவ்வொரு சொடுக்குக்கும் வித விதமா, வித்தியாசமா அதே சமயம் ரொம்ப பொருத்தமான விசயங்கள தருவாறு (Random and Matching)..

உதாரணமா இவருக்கிட்ட கிரிக்கெட்னு சொல்லிட்டு Stumble! கிற பட்டன ரெண்டு தட்டு தட்டுனதுக்கு கிடைச்ச பதில்கள்..

................இப்படியே மவுஸ் உடையவரைக்கும், இல்லைனா கை வலிக்கிற வரைக்கும் சொடுக்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

எப்படி வேலை செய்யுது??
இது நம்ம தமிழ்மணம் மாதிரி தமிழிஷ் மாதிரி (வலைப்பூவையும், திரட்டியையும் சேர்த்துக்குங்க) பதிவு செய்ய படற விசயங்கள் தான்.. நமக்கு பிடிச்ச ஒரு விசயத்த பதிவு பண்றதும், இல்ல எனக்கு பிடிச்சிருக்குன்னு (I Like it!)  ஓட்டு போடறதும் ஒரு பக்கத்தோட / தளத்தோட மதிப்ப கூட்டி அடுத்தடுத்த தேடல்கள்ள முன்னுரிமை தருது.. இதுக்கு நாம் உரிமையாளரா இருக்கனும்கறது அவசியம் இல்ல, கிட்டதட்ட Bookmark செய்யறமாதிரிதான்.. 2.2 வினாடிகள்ள புதிய பக்கங்கள பதிவு செய்ய முடிறது இதனோட சிறப்பம்சம்.. பட்டைகள் (Tags), சரியான தொகுப்புகள் (Categories), தவறா பதிவு செஞ்சிருந்தாலோ இல்ல பக்கம் காணாம போயிருந்தாலோ சுலபமா ரிப்போர்ட் பண்ற வசதிகள்னு பல User Friendly விசயங்கள் இருக்குது..

நம்ம தேர்வு செய்யற விசயங்கள் நம்ம விருப்ப பட்டியல்ல (Favorites) சேர்ந்துகிட்டே இருக்கும்.. கிட்டதட்ட 14 தொகுப்புகள்ள 500+ விருப்பங்கள (Interests) தேர்வு செஞ்சிக்க முடியும்... பட்டைய (Toolbar) பிரவுசர்ல பதிவு பண்ணிக்கலாம்...

https://addons.mozilla.org/en-US/firefox/addon/138

http://www.stumbleupon.com/help/Getting_Started/

இது மட்டுமில்லாம, நம்மள மாதிரி விருப்பங்கள உடைய நண்பர்கள தெரிஞ்சிக்க முடியும், மத்தவங்களோட பிடிச்ச விசயங்கள சுலபமா பகிர்ந்துக்க முடியும்.. YouTube, Flickr, BlogSpot, WikiPedia னு பிரபலமான Channelகள்ள இருக்கற விசயங்கள சுலபமா தேட, தெரிஞ்சிக்க முடுயும் (StumbleThru)

அதே மாதிரி நமக்கு விருப்பமான மொழியையும் தேர்வு செஞ்சி அதுல இருக்கிற விசயங்கள்ள உலாத்த முடியும்.. இப்போதைக்கு வலைசுத்தில தமிழ் சம்பந்தமா நிறைய விசயங்கள் கிடைக்கறதில்லங்கிறது ஒரு பெரிய குறை..

என்னுடைய அக்கவுண்டில் தேர்வு செஞ்சு வச்சிருக்கிற சில விருப்பங்கள்..





இனிமே என்ன, சொடுக்குங்க சொடுக்குங்க.. சொடுக்கிக்கிட்டே இருங்க!!

5 comments:

  1. நமக்கு விருப்பமான விசயங்கள (Interests) இவருகிட்ட ஒரு முறை சொல்லிட்டா போதும். ..........நீங்களும் interesting ஆ தான் சொல்றீங்க, மக்கா. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. // Chitra said...

    நமக்கு விருப்பமான விசயங்கள (Interests) இவருகிட்ட ஒரு முறை சொல்லிட்டா போதும். ..........நீங்களும் interesting ஆ தான் சொல்றீங்க, மக்கா. தகவல்களுக்கு நன்றி. //

    // blogpaandi said...

    நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி. //

    பின்னூட்டங்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  4. அட இவரையும் சுத்தி விட்டு தான் பார்ப்போமே.

    தகவலுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  5. // ரோஸ்விக் said...

    அட இவரையும் சுத்தி விட்டு தான் பார்ப்போமே.

    தகவலுக்கு நன்றி நண்பா.
    //

    நன்றி!! ரொம்ப சுத்தி சுத்தி கடைசியா தலைசுத்திட போவுது :)

    ReplyDelete