Sunday, December 20, 2009

போடுங்கம்மா ஓட்டு!!

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டப்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 

நன்றி: மாலைமலர்

இந்த செய்திய மாலைமலர் இணைய தளத்துல படிச்சதும் என்னை அறியாம சொல்லிகிட்டது.. Ohh! Shit!!..

நல்லவரோ கெட்டவரோ நம்ம நாட்டில யாருக்கு இவ்வளவு தைரியம் இருக்குது????? (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது!!).. அதே மாதிரி எதிர்கட்சினா கண்ண மூடிட்டு எல்லாத்தையும் எதிர்க்கனுமா என்ன???

என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு எல்லாம் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாதான் கொஞ்சம் புத்தி வந்து ஓட்டு போடற அன்னிக்கு டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் க்யூவுல நின்னு ஓட்டு போட தோணும்!!

படிச்சவங்க சும்மா வாய்கிழிய பேசிட்டு டிவி முன்னாடியும், சினிமா தியேட்டர்லயும், இல்ல ப்ளாக் போடவும் ஒக்காதுடறாங்க.. சொல்ல போனா அன்னிக்கு ஒரு நாளைக்கு சினிமா தியேட்டர்களுக்கும் லீவு விட்டிடலாம்.. டிவிங்களுக்கும் அன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லலாம்.. இல்லனா இந்திய தொலைக்காட்சிகளி்ல் முதல் முறையாகனு எதாவது டப்பா படத்த போட்டுடுவாங்க!!

இப்பெல்லாம் நம்ம தொகுதி பிரதிநிதிய 40% ஆளுங்க தான் தேர்ந்தெடுக்கறாங்க.. அதாவது மொத்தமே 60-70% தான் சராசரியா ஓட்டு பதிவாகுது.. அதுல இருந்து 50-60% வாங்குனவங்கதான் ஜெயிச்சு சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் போறாங்க..

இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தா, நம்மூரு அரசியல்வாதிகளும் எத்தன ஆளுங்களத்தான் Canvas (!!) செய்ய முடியும்???? இதவிட டீசெண்ட்டா சொல்ல முடியல!!

அப்படியே வேட்பாளர்களுடைய சொத்து விபரம் (முன்பு வெற்றி பெற்றிருந்தால், போன ஆட்சி காலத்திற்கு முன்-பின்), அவர்கள் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களையும் ஓட்டு போடும் இடங்களில் வைத்தால் அவர்கள் எத்தனை நல்லவர்கள் என தெரிந்து கொண்டு வோட்டு போட முடியும்!!

9 comments:

  1. நல்லவரோ கெட்டவரோ நம்ம நாட்டில யாருக்கு இவ்வளவு தைரியம் இருக்குது????? (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது!!).. அதே மாதிரி எதிர்கட்சினா கண்ண மூடிட்டு எல்லாத்தையும் எதிர்க்கனுமா என்ன??? ........அரசியல் இலக்கணம் சொல்லிட்டீங்க....... என்னத்த சொல்லி, என்னத்த திருந்தி........... சரி, நம்பிக்கையே வாழ்க்கை.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி சித்ரா..

    // ........அரசியல் இலக்கணம் சொல்லிட்டீங்க //

    நமக்கு அடிப்படை இலக்கணமே தெரியாது.. இதுல அரசியல் இலக்கணமா !!

    // சரி, நம்பிக்கையே வாழ்க்கை. //

    100% சரி!!

    ReplyDelete
  3. கட்டாய்ம் ஆக்கினால் தான் நம் மக்களுக்கு நல்லது...

    ReplyDelete
  4. // அமுதா கிருஷ்ணா said...

    கட்டாயம் ஆக்கினால் தான் நம் மக்களுக்கு நல்லது... //

    நல்லது.. பதிவின் கடைசி வரியை இப்போது புதிதாக சேர்த்திருக்கிறேன்!!

    ReplyDelete
  5. இன்னாப்பா வசந்து நாங்க நல்லாக்கீறது உனக்குப் புடிக்கலையா. ஒரு நாள் ஆசையாக அம்மா கையில் சாப்பிட்டுத் தூங்குவதை விடுத்து கண்ட கஸ்மாலத்துக்குப் போய் ஓட்டுப் போட சொல்லி டகில் ஆக்குகிறாய் நைனா. என் 42 வயதில் நான் இருமுறைதான் ஓட்டுப் போட்டுள்ளேன். ஒரு தபா நம்ம தலை இரசினி சொன்னாருன்னு போட்டேன். இன்னேரு தபா எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண் கவுன்சிலாரக போட்டேன். நான் எல்லாம் பொறந்தது ஒரு இடம், பொழப்பு ஒரு இடம் வாழற சாதி. ஓட்டுப் போட ஜனூறு மைல் எல்லாம் போக முடியாது. நன்றி.

    ஆனால் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை. நன்றி வசந்த்.

    ReplyDelete
  6. can you assist me how to publish my comments in tamil to the maalaimalar or here

    ReplyDelete
  7. // fareed said...

    can you assist me how to publish my comments in tamil to the maalaimalar or here //

    Fareed, lot of options are there like eKalapai, etc., which im using.. u might need to know Tmail type writing

    If you dont know tamil type writing, Easiest ways is may be use Google translation feature..

    http://www.google.co.in/transliterate/indic/Tamil

    ReplyDelete
  8. பித்தனின் வாக்கு said...

    // இன்னாப்பா வசந்து நாங்க நல்லாக்கீறது உனக்குப் புடிக்கலையா. ஒரு நாள் ஆசையாக அம்மா கையில் சாப்பிட்டுத் தூங்குவதை விடுத்து //

    அப்படியெல்லாம் இல்லீங்கண்ணா.. எல்லாரும் சந்தோசமா இருந்தா நல்லதுதானுங்கண்ணா!!

    // கண்ட கஸ்மாலத்துக்குப் போய் ஓட்டுப் போட சொல்லி டகில் ஆக்குகிறாய் நைனா. //

    No Comments.

    // என் 42 வயதில் நான் இருமுறைதான் ஓட்டுப் போட்டுள்ளேன். //

    !!

    // ஒரு தபா நம்ம தலை இரசினி சொன்னாருன்னு போட்டேன். //

    தலைவர் வாழ்க!!

    //இன்னேரு தபா எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண் கவுன்சிலாரக போட்டேன்.
    //

    கவுன்சிலர் ஆனாங்களா??

    // நான் எல்லாம் பொறந்தது ஒரு இடம், பொழப்பு ஒரு இடம் வாழற சாதி. ஓட்டுப் போட ஜனூறு மைல் எல்லாம் போக முடியாது.//

    நம்மளும் கிட்டதட்ட அப்படிதாங்கண்ணா.. என்னா நீங்க 500 நான் 200.. ஓட்டு போடறத கட்டாயம் ஆக்கினா நம்பல்லாம் இப்ப இருக்கிற எடத்துக்கே Voter Card-அ Transfer பண்ணிக்க மாட்டமுங்ளாண்ணா!

    // நன்றி.

    ஆனால் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை. நன்றி வசந்த். //

    பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிங்கண்ணா!

    ReplyDelete