இந்த படம் வந்து 31 வருசம் ஆகுது!! நிச்சயம் பத்தரிக்கைகளிளும், வலையுலகத்திலும் நிறைய விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்திருக்கும்.. என்னுடைய வலைப்பூ ரொம்ப புதுசு.. நான் ரொம்ப சாதாரணமானவன் (I am a common man!!).. இந்த ரெண்டு விசயமும் தான் இந்த பதிவ எழுத நம்பிக்கை கொடுத்தது..
நான் ஆர்ட் பிலிம் பார்க்குற ஆளு கிடையாது.. பாட்ஷா, பில்லா, போக்கிரி மாதிரி மாஸ் படங்களோட ரசிகன்.. இது நிச்சயம் விமர்சனமும் அல்ல.. என்னால் தலைவர் படத்த விமர்சனம் பண்ணவும் முடியாது.. So, இந்த படத்திலிருந்து எனக்கு ரொம்ப பிடித்த விசயங்கள் தான் இந்த பதிவு.. இதனோட இருக்கிற போட்டோ ஆல்பத்த மிஸ் பண்ணிடாதீங்க.. please.. இந்த பதிவ + படங்கள் உங்க Bandwidth-அ ரொம்ப சாப்டிருந்தா அதுக்கு ஒரு advance sorry
படம் பார்க்காதவங்களுக்கு ஒரு சின்ன introduction.. படத்தோட கதை ரொம்ப ரொம்ப எளிமையானது (simple - yet powerful).. அண்ணன் - தங்கைக்கிடையே இருக்குற பாசமும், முரட்டு அண்ணன் (ரஜினி - காளி), வெகுளி தங்கச்சி (ஷோபா) மற்றும் ஒரு மென்மையான காதல்தான் (சரத்பாபு - ஷோபா) கதையோட முக்கிய அம்சங்கள்...
கதை: உமா சந்திரன்
...'கல்கி வெள்ளி விழா மலரில் பரிசு பெற்ற கதை!...'
(நன்றி azhagan for pointing me out)
இனி இதில் வர முக்கியமான கேரக்டர்ஸ் பத்தி..
சரத்பாபு:-
படித்த பட்டதாரியா, கிராமத்து அதிகாரியா வரும் இவரு உண்மையில ரொம்ப நல்ல யதார்த்தமான ஆளு.. ரஜினியோட முரட்டு சுபாவத்த புரிஞ்சுக்கிறதும், எப்ப பாத்தாலும் ரூல்ஸ் பேசறதும் அதே சமயம் கஷ்டம்னு வரும்போது கூட இருந்து உதவி பண்றதுமா மெச்சூர்டான கேரக்டர்.. தலைவர் தன் தங்கைய தர மறுக்கும் போது அவரோட முரட்டு சுபாவத்த கண்டு பின் வாங்கறது ரொம்ப இயல்பு.. படத்துல எனக்கு பிடிச்ச இவரோட வசனம் (தம்பிக்கா வக்காலத்து வாங்கற க்ளார்க்குகிட்ட பேசறது)..
"சரத்: ஆமா நம்ம ஆபிஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராவது இருக்காங்கலா??
க்ளார்க்: ஏன் சார்?
சரத்: நான் காளிய பத்தி உண்மையான விவரங்கள தெரிஞ்சிக்க ஆசை படறேன்!!
ஷோபா:-
ரொம்ப வெகுளியா வர பொண்ணு.. படம் முழுக்க ரொம்ப நல்ல expressions!! அண்ணனுக்காக காதல விட்டு கொடுக்க க்ளைமேக்ஸ்ல முன் வரது ரொம்ப டச்சிங்
ரஜினியின் மனைவி்யா நடிச்சிருக்கிறவங்க..
ரொம்ப casual-ஆ அதே சமயம் கொஞ்சம் அடாவடியான கேரக்டர்.. ஆரம்பத்துல சோத்து மூட்டையா காட்டினாலும் காளி தவறான ஒரு ஆளுக்கு தன் தங்கச்சிய கட்டி கொடுக்கும் முடிவ எடுக்கும் போது எதிர்க்கிறதும், காளிய கையில்லனு கிண்டல் பண்றது தாங்காம போட்டியில கலந்து ஜெயிக்கிறதும், சரத்பாபு கிட்ட போய் பேசி ஷோபாவ கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கறதுமாக கேரக்டர் போகும்.. பிடித்த வசனம்..
casual-ஆ படுத்திருக்கும் போது பார்க்கும் ரஜினியிடம்.. "ஏன்யா முன்ன பின்ன பொம்பளயயே பாத்ததில்லியா!!".. தலைவரோட ரியாக்ஷன் சூப்பர்..
மகேந்திரன் - இளையராஜா - பாலு மகேந்திரா..
Deadly Combination!! ஒவ்வொறு கேரக்டர்லயும், ப்ரேம்லயும் மகேந்திரன் அவருடைய முத்திரை இருக்கும்... இசையராஜா (let the typo to be) பிண்ணனி இசையிலயும், பாடல்களிளையும் வெளுத்து வாங்கியிருக்காரு.. he and this film's music is my all-time favorite.. பாலு மகேந்திரா கிராமம், காடு, மலை, வானமுன்னு கலக்கியிருப்பாரு.. எதோ ஏற்காடு பக்கத்துல (உண்மைல சிக்கமங்களூர்னு நினைக்கிறேன்) எடுத்த மாதிரியோ ஒரு பீலிங்.. முப்பது வருசம் முன்னமே இவ்வளவு டீடெய்லா - royal salute :) இந்த படத்துல இவங்க work பத்தி இன்னும் பத்து பதிவு போடலாம்.. நேரமி்ன்மை காரணமா இவங்கள பத்தி இதோட நிறுத்திக்கிறேன்..
LAST BUT NOT THE LEAST, தலைவர் ரஜினி்யோட (முரட்டு) காளி Performance பத்தி... இந்த படத்துல தலைவர் நடிக்கல, வாழ்ந்திருக்காரு (விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன).. இப்ப திரும்ப இதே மாதிரி படமெல்லாம் அமையுமா?? எல்லோரும் வழக்கமா கேக்குற அதே கேள்வி,, ஏன் இதே கூட்டணியில இது மாதிரி, ஜானி மாதிரி இன்னும் நிறைய படங்கள் வரல?????
இனி ஒரு போட்டோ மாலை.. படங்களை பெரிதாக்கிட க்ளிக் செய்யவும்.. Don't miss my comments too :)
1978 ஆம்.. நம்ப முடியல!!
சின்ன பசங்க.. கண்ணுல கூட நடிப்பு.. மகேந்திரன்!!
தலைவர் Intro!!!!!!!!!!
(சரத்பாபு யாருன்னு தெரியாம) சார் யாருன்னு சொல்லலயே???
கோபம், சமாளிப்பு :)
விளையாட்டு + In Direct message to சரத்பாபு
தலைவர் casual-ஆ உக்காந்து இருக்கிற போஸ் பாருங்க,
வாசிங்க சார்..... வாசிங்கடா டேய்!!
அவசரமா கூப்பிட்டாரா.. தா உடனே வந்துடறேன்...
தங்கச்சி காலுக்கு மருதாணி... ஐயோ, ஐயோ இப்ப இப்படி Natural-ஆ பாக்க முடியறதில்லியே..
பார்த்துக்கிறேன் சார்..
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!!
மேலே கல்யாணத்திற்கு முன்... கீழே கல்யாணத்திற்கு பின்.. தலைவருக்கு கூடவா.. சும்மா காமெடி!!!
(வேலைய விட்டு நீக்கும் போது) என்னா முடிவே பண்ணிட்டீங்களா..
(எனக்கு ரொம்ப பிடிச்ச சீன், வசனம்) கெட்ட பையன் சார் இந்த காளி.. ரெண்டு கை, ரெண்டு கால் போனா கூட பொழச்சிக்குவான் சார்.. என்னா ஒரு ego!!!
தலைவரோட ஷ்டைல், என்னா ஒரு முரட்டு தோற்றம்!!
தங்கச்சிக்கு அட்வைஸ்
தங்கச்சியவாடா தப்பா பேசறே... (கீழே கெடக்கறது.. வெண்ணிற ஆடை மூர்த்தி!!)
டச்சிங் க்ளைமேக்ஸ்..
கண்ணீர்
பிரிவு
சேர்க்கை, மகிழ்ச்சி!!
பெருமை
இன்ஞினியர் சார் எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல.. இருந்தாலும் என் தங்கச்சிக்காக..
எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு சீன்ஸ்..
Mullum Malarum Touching Climax
(உண்மையில் இந்த பதிவ எழுத ஆரம்பிக்கும் போது தலைவர் பிறந்த நாள் இன்னும் ஐஞ்சாறு நாள்ல வரது ஞாபகம் இல்ல.. இப்ப இது தலைவருக்கும், அவரோட ரசிகர்களுக்கும் ஒரு பிறந்த நாள் பரிசு)
ஒலிச்சித்திரம் கேட்டிருக்கேன்.. ஒளிச்சித்திரம் இப்ப தான் பாக்கறேன். நல்ல முயற்சி.
ReplyDelete-Toto
http://www.pixmonk.com/2009/09/18/reel-rewind-classics-2/
நன்றி.. எல்லாம் தலைவர் மேல் இருக்கிற அன்பு தான் காரணம்.. எந்த போட்டோவ விடறது எத போடறதுன்னு முடிவு பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி..
ReplyDeleteYes, all the characters are wonderful. But you should know that this film is based on an award winning Novel authored by Umachandran(If my memory is right).
ReplyDeleteAzhagan, thanks for your comment and you are exactly right. I could read the following from the Title card section of the movie itself.. Thanks to the genuine director Mr. J.Mahendran. now mentioning in my blog too :)
ReplyDeleteகதை
உமா சந்திரன்
...'கல்கி வெள்ளி விழா மலரில் பரிசு பெற்ற கதை!...'
I bet ....this is one of the most natural acting...
ReplyDeleteand thalaivar one of the most most natural actors in globe...
// thalaivar one of the most most natural actors in globe //
ReplyDeleteThank you Venkat, very nice thing to see first in the morning :)
ரஜினிக்குள் இருக்கும் ஒரு அபார நடிகனுக்கு கிடைத்த அருமையான படம். வேலையில் இருந்து சரத் பாபு அவரை நீக்கும்போது, ரஜினியின் முகத்தில் எத்தனை expressions! இப்போ வரும் நிறைய வெத்து வெட்டு நடிகர்கள், அவர் நடிப்புக்கு பதில் சொல்லிட்டு, அவர் ஸ்டைலை காப்பி அடிக்கட்டும். பிறந்த நாள் நல வாழ்த்துக்கள், ரஜினி!
ReplyDelete// இப்போ வரும் நிறைய வெத்து வெட்டு நடிகர்கள், அவர் நடிப்புக்கு பதில் சொல்லிட்டு, அவர் ஸ்டைலை காப்பி அடிக்கட்டும் //
ReplyDelete100% உண்மை. மக்களுக்கு நல்லா தெரியும்.. அந்த வெத்து வேட்டுக்களுக்கு மட்டும் ஏன்தான் மண்டைல ஏற மாட்டீங்குதோ??
ஏணில ஏறுனுமுன்னா கூட முதல் படியிலுருந்து எட்டு எட்டா வச்சாத்தான் உச்சிக்கு போக முடியும்.. எடுத்தவுடனே எட்டாவது படில கால வெக்கப்பாக்குறாங்க
Summa natchunu iruku ungal vimarsanam.
ReplyDelete// Summa natchunu iruku ungal vimarsanam.//
ReplyDeleteநன்றி கோழிபையன்!!
its gr8 movie with fantastic acting skills of Rajini...
ReplyDeletethalaivar is gr8 actor!!!
thanks man for this blog..
// its gr8 movie with fantastic acting skills of Rajini...
ReplyDeletethalaivar is gr8 actor!!!
thanks man for this blog.. //
Thank you Senthil for you comments and appreciation :)
நல்ல படம்!
ReplyDeleteவால்பையன், SAnjevSpl
ReplyDelete//நல்ல படம்!//
//Good compilation Nanba, Thanks for the effort.//
நன்றிகள்
வசந்த கலக்கிட்டீங்க போங்க! அசத்தலான பதிவு மற்றும் வித்யாசமான முயற்சி.. இது வரை இப்படி ஒரு பதிவை நான் எங்கும் பார்த்தது இல்லை..
ReplyDeleteதலைவர் பிறந்த நாளுக்கு இதை விட வித்யாசமான ஒரு பதிவு கொடுக்க முடியாது.. அட்டகாசம்.
// வசந்த கலக்கிட்டீங்க போங்க! அசத்தலான பதிவு மற்றும் வித்யாசமான முயற்சி.. இது வரை இப்படி ஒரு பதிவை நான் எங்கும் பார்த்தது இல்லை..
ReplyDeleteதலைவர் பிறந்த நாளுக்கு இதை விட வித்யாசமான ஒரு பதிவு கொடுக்க முடியாது.. அட்டகாசம். //
கிரி, உங்களுடைய பாராட்டுக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!!
Hi Vasanth,
ReplyDeleteGood attempt.....gud writting.....Keep Rocking..
Viji
//Good attempt.....gud writting.....Keep Rocking.. //
ReplyDeleteThanks Viji :)
அழகான விமர்சனம்....
ReplyDelete//க.பாலாசி said...
ReplyDeleteஅழகான விமர்சனம்....//
ரொம்ப நன்றி.. தலைவருக்கு advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
சிறந்த திறனாய்வு
ReplyDeleteHi Vasanth,
ReplyDeleteHow r u? & nice to see u on this blog.
Different peoples thoughts will diffrent. But commonly most of the peoples will follow the same things what others doing.
An Odd Man Thoughts Oddly......
Your are the one among.... Tried Oddly.
Very nice keep it up.
- mohan
da machi nan thaan suresh
ReplyDelete